மதுரை, நவ.2- குழந்தைகளைப் போதைக்கு அடிமையாக்கும் வகையில், புதிய வடி வில் வெளிவரும் கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களைத் தடுப்ப தற்கு, உணவுப் பாதுகாப்புச் சட்டத் தின் கீழ் கூடுதல் வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என ஒன்றிய அர சுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் காளத்திமடம் பகுதியைச் சேர்ந்த ஆனஸ்ட் ராஜா என்பவர், தடை செய்யப்பட்ட கூல் லிப் புகையிலைப் போதைப்பொருங் களை பெங்களூருவிலிருந்து கடத்தி வந்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். கைது செய் யப்பட்ட ஆனஸ்ட் ராஜா, தமக்கு ஜாமீன் வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு தாக் கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி பரதசக்கர வர்த்தி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆனஸ்ட் ராஜாவுக்கு ஜாமீன் மனு வழங்க முடியாது என உத்தரவிட்ட நீதி பதி பரதசக்ரவர்த்தி தமது உத்தரவில் ஒன்றிய - மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். மாணவர்களுக்கு 2 முறை பல் மருத்துவ பரிசோதனை “கூல் லிப்பைப் பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள் வகுப்பில் அலட்சி யமாக நடந்து கொள்கின்றனர். இது குறித்த தொடர் சம்பவங்கள் நீதி மன்றத்தின் கவனத்திற்கு வந்திருக்கி றது. கூல் லிப் புற்றுநோய்க்கு வழி வகுக்கும். அதற்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் தயாரித்து தமிழ கத்திற்கு கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவ்விவகாரத்தை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. பள்ளிகளுக்கு அருகில் புகை யிலைப் பொருட்களை விற்பனை செய்தல் அல்லது குழந்தைகளுக்கு விற்க முயன்றால் தொடர்புள்ள நபர் கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உற்பத்தியாளர், விநியோ கஸ்தர், விற்பனையாளர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனமாக இருந்தால் தொடர்புள்ள பணியாளர், நிறுவன இயக்குநர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும். சட்டப்பூர்வ எச்சரிக்கை படம், வாசகம், தயாரிப்பின் மீது இடம் பெறவில்லை எனில் நடவ டிக்கை எடுக்க வேண்டும். புகை யிலை அல்லது நிகோடின் கறை களை கண்டறிய அரசு, தனியார் பள்ளி களில் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிலும் குறைந்தபட்சம் 2 முறை பல் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்மாநில, மாவட்ட, பள்ளிகள் அளவில் குழுக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் புகையிலை உபயோகிப்பதை தடுப்பதற்கு குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மையம் நிறுவ வேண்டும். அந்த மையத்தில் ஒரு நிபுணர், மருத்துவ சமூக பணியா ளர் அல்லது குழந்தை உளவியலா ளர் ஆகியோரை நியமிக்க வேண்டும். இந்த மையங்களில் போதைக்கு அடிமையான குழந்தை களுக்கு ஆலோசனை, சிகிச்சை அளிக்க வேண்டும். குழந்தைகளின் மனஉறுதியை பாதிக்காத வகை யில் அவர்களின் பைகளை கவன மாக பரிசோதிக்கும் வகையில் சுற்ற றிக்கையை வெளியிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்யலாம். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு தன்னார்வ தொண்டர் அல்லது பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ஒருவர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு புகையிலை பொருட்களை பயன்படுத்திய தற்கான அல்லது விற்பனை செய்த தற்கான ஆதாரம் ஏதேனும் இருந்தால் அருகாமையில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதைப் பற்றி புகா ரளிக்க மொபைல் எண், கட்டணம் இல்லா தொலைபேசி எண் அல்லது இணையதளம் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளி யும் புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் என்ற வழிகாட்டு தல்களைக் கொண்ட அறிவிப்பு பலகைகளை அமைக்க வேண்டும். மாணவர்களுக்கு அளிக்கப் படும் சிகிச்சைகள் குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் ஒருங்கி ணைப்பில் ஈடுபட வேண்டும். குழு உறுப்பினர்கள் மற்றும் நடவடிக்கை அறிக்கை மூலம் தகவல்களைப் பதிவேற்றம் செய்ய மொபைல் செயலி உருவாக்கப்படலாம். உறுப்பினர்களின் செயல்பாடு களை கண்காணிக்க மாவட்ட வாரி யாக கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் மாநிலக் குழுவும் அமைக் கப்பட வேண்டும். தடை செய்யப்பட்ட குட்கா அல்லது பான்மசாலா உற்பத்தி, பாதுகாத்தல், விநியோகம், விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பி யுள்ளது. மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்க ஒன்றிய அரசிற்கு அதிகாரம் உள்ளது. அதை நிறைவேற்ற மாநில அரசு கள் கடமைப்பட்டுள்ளன” என்று நீதிபதி பரதசக்கரவர்த்தி கூறினார்.
போதைப்பொருள் இல்லாத் தமிழகம்
விசாரணையின்போது மனு ஒன்றைத் தாக்கல் செய்த தமிழக அரசு, “தடை செய்யப்பட்ட புகை யிலை மற்றும் நிகோடின் அடங்கிய உணவுப் பொருட்கள் விற்பனை க்கு எதிராக நடவடிக்கை எடுக்க உணவுப் பாதுகாப்புத்துறை, போலீசார் அடங்கிய குழு அமைக் கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 19 ஆயிரத்து 822 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும் 2 லட்சத்து 32 ஆயிரம் கிலோ கிராம் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ. 30 கோடியே 81 லட்சத்து 89 ஆயிரத்து 400 அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக 990 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. போதைப்பொருள் இல்லா தமிழ கத்தை உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது” என குறிப் பிட்டிருந்தது. அதேநேரம் ஒன்றிய அரசு தாக்கல் செய்த மனுவில், “இவ்விவ காரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரி களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத் தப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதை மாநில அரசு அமல்படுத்த வேண்டும். பிற மாநிலங்களில் கூல் லிப்பிற்கு சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக் கப்பட்டிருந்தது. கூல் லிப் தயாரிப்பு நிறுவ னங்கள் முன்வைத்த வாதத்தில், “சட்டப்படி அனுமதிக்கப்பட்ட மாநிலங்களில் மட்டுமே கூல் லிப்பை உற்பத்தி செய்கிறோம். தயாரிப்புகளை குழந்தைகளுக்கு விற்க வேண்டும் என நினைக்க வில்லை. இவற்றைத் தடை செய்யப்பட்ட மாநிலத்திற்குள் கடத்தி குழந்தைகளுக்கு விற்பனை செய்கின்றனர்” என குறிப்பி ட்டிருந்தனர். அனைத்துத் தரப்பு வாதங்க ளுக்குப் பிறகு, இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை, தமிழக பள்ளிக் கல்வித்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, கூல் லிப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹரி யானா, கர்நாடகாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் ஆகியவை பதி லளிக்குமாறு நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.