சென்னை,ஜன.27- தமிழக அரசின் விருதுகள் பெறும் விருதாளர்கள் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களுக்கும், தமிழ்ப் பேரறிஞர் களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்திவருமாறு: இந்தியாவிலேயே முதன் முதலாக மே தினத்தை கொண்டாடிய வர லாற்று நாயகர் தோழர் சிங்காரவேலர் பெயரிலான விருது தீக்கதிர் ஆசிரியர் தோழர் மதுக்கூர் ராமலிங்கத்திற்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. விருதுபெற்ற தோழர் மதுக்கூர் ராம லிங்கம் அவர்களை பாராட்டி மகிழ்கிறோம். அதுபோல விருதுகள் அறிவிக்கப் பட்ட நாஞ்சில் சம்பத், பாரதி கிருஷ்ண குமார், புலவர் செந்தலை கவுதமன், சூர்யா சேவியர், முனைவர் இரா. சஞ்சீவிராயர், முனைவர் கு. அரசேந்தி ரன், நா. மம்மது, முனைவர் மா. இரா சேந்திரன், பாரதி பாஸ்கர், ஏ.எஸ். பன்னீர்செல்வம், சு.கி. சிவம், நெல்லைக் கண்ணன், ஞான. அலாய்சியஸ் ஆகி யோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விருது பெறும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும், உயிர்மை திங்கள் இத ழுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய விருதுகளின் வழியாக சமூகப் பணிகளை ஊக்குவித்து வளர்க்கும் தமிழ்நாடு அரசிற்கும், முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியை யும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.