tamilnadu

img

திமுக தலைவராக மீண்டும் மு.க.ஸ்டாலின் தேர்வு

சென்னை, அக்.9- திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு  செய்யப்பட்டார். மேலும், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுகவின் 15-வது உட்கட்சிப் பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஏற்கெனவே ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரச் செயலாளர்கள், நிர்வாகி கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்று  நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.  திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக் குழு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டி யிடுவோரிடம் வெள்ளியன்று அண்ணா  அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. திமுக தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2ஆவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல,  பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு  ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரப் பூர்வமாகத் தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ்  கன்வென்ஷன் சென்டரில் ஞாயிறு (அக். 9) காலை  நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டா லின், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். துணைப் பொதுச் செயலாளர்கள் இதன் பின்னர் திமுக  துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் தலைமை நிலைய முதன்மைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  இதன்படி துணைச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தலைமை நிலைய முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு தேர்வு செய்யப்பட்டார்.

தலைவர்கள் வாழ்த்து

இந்நிலையில் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.