tamilnadu

img

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே நடத்துக!

தென்காசி, அக்.29-  சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை  ஒன்றிய-மாநில அரசுகள் உடனடியாக நடத்த வேண்டும் என்று பட்டியலின உரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பட்டியலின உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் சனிக்கிழமையன்று பட்டியலின உரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வாசுதேவ நல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப் பினரும் மூத்த வழக்கறிஞருமான ஆர்.கிருஷ்ணன் தலைமை தாங்கி னார். இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் அசோக் ராஜ்  வர வேற்றார். ஜனநாயக மாதர் சங்க த்தின் அகில இந்திய இணைச்  செயலாளர் பி.சுகந்தி துவக்க உுரையாற்றினார். மாநில மனித உரி மைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி துரை ஜெயச்சந்திரன், தமிழக அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர். கிறிஸ்துதாஸ் காந்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கோ.  சாமுவேல்ராஜ் ஆகியோர் கருத்துரையாற்றினர். 

தியாகி இமானுவேல் பேரவையின் மாநிலப் பொதுச் செய லாளர் வேல்முருகன், ஐந்திணை  மக்கள் கட்சியின் ஒருங்கிணைப் பாளர் தேவதாஸ், முன்னாள் மாநி லங்களவை உறுப்பினர் தங்க வேலு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் மருத்துவர் ராமகுரு, நெல்லை வழக்கறிஞர் சங்கத்தின்  முன்னாள் செயலாளர் செந்தில் குமார், அகில இந்திய மக்கள் மறு மலர்ச்சி கழகத்தின் பொதுச்செய லாளர் பொன் முருகேசன், தமிழக மக்கள் கட்சியின் மாநிலச்செய லாளர் பாஸ்டர் தனராஜ் உயர் நீதி மன்ற வழக்கறிஞர் சுசில்குமார், தே வேந்திர குல வேளாளர் சமுதாய கூட்டமைப்பின் நிர்வாகி ஊர் காவலன், கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் வழக்கறிஞர் விஜய ராம், பட்டியலின உரிமை பாது காப்பு இயக்கத்தின் சிவகாசி முரு கன், முத்துக்குமார்,  இயக்கத்தின் திருநெல்வேலி ஒருங்கிணைப்பா ளர் சுடலைராஜ் மற்றும் வழக்க றிஞர் சின்னராஜ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் உ. முத்துப் பாண்டியன் மற்றும் வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நடராஜன் நன்றி கூறினார்.  பொதுத்துறைகளை பாதுகாத்து தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அரசு போக்குவரத்து, மின்சாரம், கூட்டுறவு, கல்வி ஆகிய  துறைகளில் ஒப்பந்த முறையை ரத்து செய்து, இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். குலத்தொழில் முறையை வலியுறுத்தும் ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கிறிஸ்தவ தேவேந்திரகுல வேளாளர்கள் உட்பட கிறிஸ்தவ பட்டியல் இன மக்களை பட்டியல் சாதிப்பிரிவில் இணைத்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் வணிக வளாகங்களில் பட்டியல் இன  மக்களுக்கு கடைகளை ஒதுக்கீடு  செய்ய  வேண்டும். அரசு ஒப்பந்த ங்களில் பட்டியல் பிரிவினருக்கு குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தாட்கோ பரிந்துரை செய்தும் கடன் தர மறுக்கும் பொதுத்துறை வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடு ப்பை ஒன்றிய, மாநில அரசுகள் உடனே நடத்த வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை  முழுவீச்சில் கறாராக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.