tamilnadu

img

சிறந்த துறையாக வனத்துறையை மாற்றுவோம்: அமைச்சர் ராமச்சந்திரன்

காஞ்சிபுரம், ஜூலை 6- இந்தியாவிலேயே சிறந்த துறையாக வனத்துறையை மாற்று வதற் கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழ்நாட்டில் 2 கோடியே 50 லட்சம் மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை வகித்தனர்.

காட்டுப்பன்றி தொல்லை

இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு, தங்களது குறைகள் மற்றும் கோரிக்கை களை எடுத்துரைத்தனர். அப்போது பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், “கடந்த ஆட்சி காலத்தில் காட்டுப் பன்றி கள் தொல்லையால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. கிடைக்கவில்லை எனில் 9443566666 என்ற இந்த எண்ணில் தன்னிடம் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், “வனப் பரப்பை 33 விழுக்காடாக அதிகரிக் கும் முதலமைச்சரின் கனவை நினை வாக்கும் வகையில் வனத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரு கிறது. அதற்கு விவசாயிகளின் ஆதர வும் தேவை. இந்தியாவிலேயே சிறந்த துறையாக வனத்துறையை மாற்ற வேண்டும். அதற்காக தொடர்ந்து பணி யாற்றிக் கொண்டிருக்கின்றோம்” என்றார்.
 

;