சென்னை, செப். 29 - சலுகைகளை ஒவ்வொன்றாக பறித்து வருவதால் ஒன்றரைக் கோடி ஓய்வூதியர்கள் வஞ்சிக்கப்பட்டுள் ளதால் வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை அகற்றுவோம் என்று தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சூளுரைத்துள்ளது. ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுக்குழு கூட்டம் வெள்ளியன்று (செப்.29) சென்னையில் தொடங்கியது. காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவமனை கோருகிற தொகையில் 4ல் ஒரு பகுதியை மட்டும் ‘பேக்கேஜ் டீல்’ என்ற பெயரில் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. இதனை ரத்து செய்து, மருத்துவமனை கோரு கிற தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும் அல்லது இந்த திட்டத்தை மின்வாரியமே ஏற்று செயல்படுத்த வேண்டும். மின்வாரியம் உருவாக்க உள்ள கார்பஸ் நிதியத்தை கைவிட வேண்டும். தினக்கூலி சேவை காலத்தை இணைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஒன்றிய அரசு அறிவிக்கும் அதே அளவு அகவிலைப்படி மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவிற்கு தலைமையேற்று சங்கக் கொடியை அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் ஏற்றினார். சிஐடியு மாநில செயலாளர் சி.திருவேட்டை வரவேற்றார். நல அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பொதுக் குழுவை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் வாழ்த்திப் பேசினார். தீர்மானங்களை முன்வைத்து நவம்பர் மாதத்தில் பெரும் போராட்டம் நடத்துவதற் கான அறைகூவல் தீர்மானத்தை நல அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ெஜக தீசன் முன்மொழிந்தார்.