tamilnadu

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

தூத்துக்குடி, ஜூன் 12 தூத்துக்குடியில் 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பை யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரம ணியன் குருசாமி (25). இவர் தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில்  தங்கி கூலி வேலை பார்த்து வந்துள் ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த  15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்ததாக கூறப்ப டுகிறது. இதுகுறித்து அச்சிறுமியின் தாயார் தாளமுத்துநகர் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். அவரது புகா ரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து  விசாரித்து வந்தனர். இந்நிலை யில் தலைமறைவாக இருந்த குரு சாமியை போலீசார் வியாழனன்று கைது செய்தனர். அவர் மீது போக்சோ  சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட சிறு மியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  

தூத்துக்குடி மாவட்டம், கழுகு மலை வட்டத் தெருவைச் சேர்ந்தவர் காளிராஜ் மகன் இசக்கிமாரி(25). கொ ரோனா பொதுமுடக்கத்தால் மும்பை யில் இருந்து கடந்த 7  நாள்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பினாராம். இந்நிலையில் இவர் அதே பகுதி யைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு அளித்து வந்த தாகக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து வெளியில் சொன்னால் குடும்பத்தோடு கொலை  செய்திடுவேன் எனக் கூறி மிரட்டி னாராம். இதுகுறித்து சிறுமியின் தாய்,  கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி,  சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொ டுத்த இசக்கி மாரியை போக்சோ சட்டத்தின்கீழ்  வழக்குப் பதிந்து கைது செய்தனர்.