கே.கே.ஷைலஜாவுக்கு அமோக வரவேற்பு
கேரள மாநிலத்தின் வடகரா மக்களவைத் தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.கே.ஷைலஜா களமிறங்கியுள்ளார். வடகராவின் ஒவ்வொரு பகுதியிலும் எளிமையான மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை கே.கே.ஷைலஜா முன்னெடுத்து வருகிறார். மாண வர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். புதனன்று வடகரா நகர சாலையில் கே.கே.ஷைலஜா பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது அவருக்கு ஆதரவாக திரண்ட மக்கள் வெள்ளம்.