tamilnadu

img

பாலர் பூங்காவின் ‘வெயிலோடு விளையாடு!’

மதுரை, ஜுன் 5 - பாலர் பூங்கா சார்பில் மதுரை  மாநகரில் மே 27, 28 தேதிகளில் இரண்டு நாட்கள் வெயிலோடு விளையாடு முகாம் நடைபெற்றது. முதல் நாள் முகாம் தென்பரங் குன்றம் அடர் ஆலமரங்களின் நிழ லில் நடைபெற்றது. 64 குழந்தை கள் பங்கேற்றனர். குழந்தைகள் பேச, பாட, கதை சொல்ல, ஆட்டம் பாட்டம் கொண் டாட்டமும் இருந்தது. பின்னர் சுற்றுச்சூழல் பூங்காவில் மூன்று மணி நேரம் விளையாட்டு.‌  பின்னர் “வெயில்” குறித்து அவர்களோடு உரையாடல் நடை பெற்றது. தென்பரங்குன்றத்தில் அமைந்துள்ள சமணர் குகைக்கு சென்றும் கண்டு களித்தனர். இந்நிகழ்வுகளை சரவணன், இந்திரா, பாண்டியராஜன், திவ்ய பாரதி, சுபஸ்ரீ ஆகியோர் ஒருங்கி ணைத்தனர். மறுநாள் முகாமில்,  குழந்தை கள் கீழடிக்கு தனி பேருந்து ஏற்பாடு செய்து அழைத்துச் செல்லப் பட்டனர். கீழடி அருங்காட்சியகத்தில் அனைத்து குழந்தைகளும் 15 நிமிட டாக்குமெண்டரி படம் பார்த்து,  அங்குள்ள பொருட்களை கண்டு களித்தனர். இரண்டு நாட்கள் நிகழ்வினை  பாலா, கோபி, ரமேஷ்  ஒருங்கிணைத்தனர்.