கரூர் நெரிசல் துயரம் மாமல்லபுரத்தில் ‘திடீர்’ ஆறுதல்; விஜய்யின் உத்தி ‘விளம்பர சாகசமா’?
சென்னை,அக். 27 - தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டத்தில் நிகழ்ந்த கோரமான நெரி சலில் 41 பேர் பலியான துயரச் சம்பவ த்துக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களு க்கு நடிகர் விஜய் மாமல்லபுரத்தில் ‘ஆறுதல்’ அளித்துள்ளார். சம்பவம் நடந்த கரூரில் சந்திக்காமல், பாதிக்கப் பட்டவர்களை நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வாகனங்களில் அழைத்துச் சென்று, ஒரு மூடிய அறைக்குள் ‘ஆறுதல்’ அளித்தது, சட்டப் பொறுப்பைத் தவிர்ப்பதற்கான ‘விளம்பரச் சாகசம்’ என்று அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் விவாதப் பொருளாகியுள்ளது. கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பான கிரிமினல் வழக்குகள் மற்றும் அரசியல் கொந்தளிப்பின் மத்தி யில், சம்பவம் நடந்த களத்தைத் தவிர்த்து, மாமல்லபுரத்தை ஆறுதலுக்காகத் தேர்ந்தெடுத்தது, விஜய் கட்சியின் பிஆர்ஒ வேலை யாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்புக்கு முன்னதாகவே, பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு உறுதியளிக்கப் பட்ட ரூ.20 லட்சம் இழப்பீடு வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுவிட்ட தாக தெரிகிறது. இது, சந்திப்பின் கவ னத்தை, பணப் பரிமாற்றம் குறித்த விவா தங்களில் இருந்து மாற்றி, விஜயின் தனிப் பட்ட இரக்கம் மற்றும் ‘சகோதரப் பாசம்’ ஆகியவற்றைப் பேச வைக்கும் முயற்சி என்று விமர்சனம் எழுந்துள்ளது. பல்வேறு சமூக ஊடகங்களில் இந்த உத்தி குறித்துப் பேசிய அரசியல் விமர்சகர்கள், உள்ளூர் எதிர்ப்பு களையோ, ஊடகங்களின் கேள்விக ளையோ தவிர்க்க, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நீண்ட தூரம் பயணிக்க வைத்து, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் சந்திப்பது, அவர்களின் துயரத்தை அர சியல் விளம்பரத்திற்கான கருவியாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற விமர்சனத்தை வலுப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாது என்று விஜய் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்ட தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசியல் கட்சியாகிய தவெக, அதன் முதல் பெரிய பிரச்சனை யில் தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதை விட, அரசியல் பிம்பத்தை மீட்டெடுப்பதற்கே முன்னுரிமை அளித்துள்ளதாகப் பரவலாக கண்டனம் எழுந்துள்ளது. புதிய கட்சி யின் நம்பகத்தன்மை, நிர்வாகத் தோல்விக்குப் பொறுப்பேற்கும் அரசி யல் அறத்தின் அடிப்படையிலேயே பரி சோதிக்கப்படும் என்பதை மாமல்லபுரம் நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது. சட்டப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு அடியும், பொது வெளியில் அவர் மீதான நம்பிக்கையை மேலும் குறைக்கும் என்று அரசியல் வல்லு நர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
