tamilnadu

img

மோடிக்கு காவடி தூக்குகின்றன அதிமுக அணிகள்

ஈரோடு, பிப்.2- மோடிக்கு காவடி தூக்கியதால், அதிமுக அணி பிணியில் இருக்கிறது என ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் செயல்வீரர்கள் கூட்டத்தில்,  மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சாடினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற செயல் வீரர்கள் கூட்டம் ஈரோடு பிளாட்டினம் மஹால் மைதானத்தில் நடைபெற்றது. திமுக ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துச்சாமி தலைமை தாங்கினார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி, திமுக துணை பொது செயலாளர் அந்தியூர் ப. செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திமுக முதன்மை செய லாளர், அமைச்சர் கே.என்.நேரு,  மதிமுக பொதுசெயலாளர் வைகோ,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயலாளர் ஆர்.முத்தரசன், விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் மாநில பொது செயலாளர் தொல்.திருமாவளவன், முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர்  மொகைதீன், மனிதநேய மக்கள் கட்சி யின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின்  மாநில பொதுசெயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஆதி தமிழர் பேரவை தலை வர் அதியமான், மக்கள் நீதி மைய தேர்தல் பொறுப்பாளர் அருணாச்சலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு  மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், திருமகன் ஈவேரா விட்டுச்சென்ற பணியை தொடர பொருத்தமானவர் இளங்கோவன், கடந்த தேர்தலில் தனியாக களம் கண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நாட்டின் நிலை கருதி தற்போது இந்த  தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த அணி கருத்தொற்றுமையோடு இயங்குகிறது. ஆனால் கடந்த தேர்தலில் இருந்த எதிர் அணி இன்று  சிதறு தேங்காயைப் போல நொறுங்கிப் போய் கிடக்கிறது. அவர்கள் இன்று  தனித்தனியாக நிற்கிறோம் என்று ஈரோட்டு மக்களை ஏமாற்ற முயல்கிறார்கள். அடிப்படையில் அவர்கள் பாஜக கூட்டணியில் தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். இந்த அணி எதிர் அணியினரை புறமுதுகிட்டு ஓடுகிற, விரட்டுகிற வீரர்கள் நிறைந்த அணி, கடமையை நிறைவேற்றும். 

மோடி - அமித்ஷா  தப்ப முடியாது

மோடியின் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் இன்று தள்ளாடிக் கொண்டிருக்கிறது. அதானி, அம்பானிக்காக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி. அதானி யின் கொள்ளை இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதானி எப்படி ஊழல் செய்தார், கொள்ளையடித்திருக்கிறார் என்று இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து அமெரிக்க நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதானி ரூ.17 லட்சம் கோடி மோசடியில் ஈடு பட்டிருக்கிறார். இந்த மோசடியில் மோடிக்கும், அமித்ஷாவிற்கும் சம்பந்த மில்லையா? அதானிக்கு விலங்கு பூட்டும் நிலை வருகிற போது, எல்ஐசி, எஸ்பிஐ மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணத்தை எடுத்து கொடுத்த மோடி, அமித்ஷாவும் தப்ப முடியாது. 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற படுகொலைகளைப் பற்றி லண்டனில் இருக்கும் பிபிசி நிறுவனம் ஆவணப் படத்தை வெளியிட்டிருக்கிறது. மோடியைக் கண்டு இந்தியாவில் இருக்கும் ஊட கங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் பயப்படுகிறது. எப்படி கொடூரமாக 2002ல் சிறுபான் மை மக்களை கொன்றார்கள் என்று பிபிசி நிறுவனம் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இதைக் கண்ட மோடி அதைத் தடை செய்ய முயற்சித்தார். ஆனால் தடை  செய்ய முடியவில்லை. நாடு முழுவதும்  திரையிடப்படுகிற நிலைமை ஏற்பட்டிருக்கி றது.  எனவே, 2024 நெருங்குகிற நேரத்தில் அதானி, மோடியின் முகத்திரை கிழிக்கப்  பட்டுள்ள நிலையில் இந்த இடைத்தேர்தல்  வந்திருக்கிறது. மேற்கு மண்டலத்தில் தொழில் கள் அழிந்து கிடக்கிறது. நடுத்தர தொழில்கள் படுத்துவிட்டன. இப்படி இந்தியாவையே நாசப்படுத்துகிற மோடியை எதிர்த்துதான் தமிழ்நாட்டில் மகத்தான கூட்டணியை உரு வாக்கியிருக்கிறோம். மோடிக்கு காவடி தூக்குகிற அடிவருடிகளை அடக்கி வைக்கிற ஒரு அணியாக இந்த அணி இருக்கப் போகி றது. நம்பிக்கை பெறுகிற வெற்றியைப் பெறு கிற வகையில் களப்பணியாற்றுவோம் என்  றார்.

வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், சிறப்பாக நடக்கக் கூடிய ஆட்சி  மு.க.ஸ்டாலின் ஆட்சி, தமிழக மக்கள் மகிழ்ச்சி அடையும் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றார்.  மக்கள் நீதி மய்யம் கட்சி இடைத்தேர்தல் பொறுப்பாளர் அருணாச்சலம் பேசும்போது நாடும், தமிழ்நாடும் அச்சுறுத்தலுக்கு உள்  ளாகியுள்ளது,மீண்டும் ஒரு சுதந்திர  போராட்டத்திற்கு தயாராகி வருகிறோம், சர்வாதிகாரத்தை அழிக்க வேண்டிய சூழல்  உள்ளது, இடைத்தேர்தல் வெற்றி நாடாளு மன்ற தேர்தலுக்கு அச்சாணியாக அமைய வேண்டும். அதிமுக வைப்புத்தொகையை இழக்க செய்ய வேண்டும் என்றார்.  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசும்போது  ஈரோடு மக்கள் எதையும் வீணாக செய்ய மாட்டார்கள், தமிழக முதல்வரின் செயல்பாடு கள், திட்டங்கள் இடைத்தேர்தல் வெற்றிக்கு  வாய்ப்பாக அமையும், திமுக பெண்களுக்கு  கொடுத்த திட்டங்களால் பெண்கள் வாக்கு எதுவும் மாறாது என்றார்.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர், தொல்.திருமாவளவன் பேசுகையில், ஈவிகேஎஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவித்து தேர்தலில் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. இந்தியா ஆபத்தில் சிக்கி யுள்ளது. பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவ ணப்படத்தில் நாடு எவ்வளவு சிக்கலில் இருக்கிறது என்பது தெரிய வருகிறது. உலக  நாடுகளுக்கு மோடி பயணம் செய்வது  அதானியின் வளர்ச்சிக்காக. அப்படிப்பட்ட வர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற திமுக எடுத்து வருகிற முயற்சி முக்கியமானது என்றார். 

முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செய லாளர் இரா.முத்தரசன் பேசுகையில் திரு மகன் ஈவேரா இழப்பு கிழக்குத் தொகு திக்கான இழப்பு, தேர்தல் மிகக்குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டதும், தோழமை கட்சிகளுடன் பேசி கூட்டணி தர்மத்தை காத்  தார் முதல்வர், எதிரில் போட்டியிடும் கட்சிக்கு யார் தலைமை என்று தெரியாத நிலை உள்  ளது. ஆளுக்கொரு இலையாக பிரித்துக் கொண்டார்கள். தமிழ்நாடு பெயரை சொல்ல  மறுத்த ஆளுநர் மீண்டும் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பாஜக கடைசியாக சமர்ப்  பித்த பட்ஜெட்டின் மூலம் நாட்டு மக்களுக்கு அல்வா கொடுத்துள்ளனர் என்றார்.  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகை யில், என் மகனை இழந்தாலும் கூட, மக்கள்  சேவை மூலம் துக்கத்தில் இருந்து விடுபட முடியும். நான் வயதானவன் என்றாலும் உள்  ளத்தால் இளமையானவனாக இருக்கிறேன். என் ஊருக்காக நான் கடைசி காலத்தில் சேவையை செய்ய விரும்புகிறேன். என் மகன்  திருமகன் ஈவேரா தொடர்ந்து நல்ல பணி களை செய்துள்ளார் என்றார். 

கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், கூட்டணி கட்சியினரின் சம்மதத்தோடு வேட்  பாளரை அறிவித்தார் முதல்வர். 20 மாத காலத்தில் 400 கோடி ரூபாய் ஈரோட்டிற்கு மட்டும் நிதி வழங்கியுள்ளார்.  அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். அமைச்சர் ஐ.பெரிய சாமி உள்ளிட்ட அமைச்சர்களும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும், பெருந்திரளான தொண்டர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிர மணியன் நன்றி கூறினார்.



 

 

;