tamilnadu

img

ஈரோடு முதல் கடலூர் வரை சமூகநீதி பாதுகாப்பு பயணம்

சென்னை, பிப். 2- ஈரோடு முதல் கடலூர் வரைக்கும் திராவிடர் கழத் தலைவர் கி. வீரமணி மேற்கொள்ளும் சமூக நீதி பாதுகாப்பு சுற்றுப் பயணத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள்  பங்கேற்கி றார்கள். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூக நீதி பாதுகாப்பு, சேது  கால்வாய் திட்டத்தை அமல் படுத்த வேண்டும், இளைஞர் கள் வேலை வாய்ப்பு, மாநில உரிமை பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் அண்ணா பிறந்த நாளான பிப்ரவரி 3ஆம் தேதி ஈரோட்டில் தொடங்கி மார்ச் 10ஆம் தேதி கடலூரில் நிறைவு பெறுகிறது. அரசமைப்புச் சட்டத்திற்கு  விரோதமாக பொருளாதார அடிப்படையில் பொருளா தாரத்தில் நலிவுற்றவர்களி லேயே உயர்ந்த சாதியின ருக்கு இடஒதுக்கீடு என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு இடமளிக்கா மல், அதை முற்றிலும் பாரபட்ச நோக்கத்துடன் அவசரகதியில்  ஒன்றிய பாஜக அரசு நடை முறைப்படுத்தியுள்ளது. சமத்துவ, சம உரிமைக்கு எதிராக சனாதனத்தைப் பேசிக் கொண்டு திரிபுவா தங்களை செய்வோரை தோலுரித்து,

ஆர்.எஸ்.எஸ். முகமூடிகளை அடையாளம் காட்டும் வகையில் இந்த பிரச்சார பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பயணத்தில் அமைச்சர் கள், சட்டமன்ற உறுப்பினர் கள், திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். பிப். 3 அன்று குமாரபாளை யத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கும் பயணம் மாலை 7 மணிக்கு ஈரோட்டில் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடை பெறுகிறது. இந்த பிரச்சாரத்தையொட்டி அனைத்து இடங்களி லும் மாலை 5 மணி மற்றும் மாலை 7 மணிக்கு கூட்டங்கள் நடை பெறுகின்றன. குன்னூரில் மட்டும் பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில்  அளிக்கையில், “இந்த பிரச்சா ரப் பயணத்தில் வாய்ப்பி ருந்தால் முதலமைச்சர் பங்கேற்பார் என்றும் கடலில் பேனா சின்னம்  அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக் கூறப்படுவதை அரசு புறந்தள்ள வேண் டும் என்றார்.

;