“என்ன தம்பி... இன்னிக்கு காலைலயே வந்துட்ட மாதிரி தெரியுது... உங்களுக்கு மதியம்தான வகுப்பு..?”
“படிக்கலாம்னு வந்தேன்... உக்காந்து படிச்சுக்கலாம்னு சொன்னாங்கள்ல... ஆனா, இடமே இல்லை.. அதுக்கு சேத்துதான் ஃபீஸ் வாங்குனாங்க..”
“சாப்புட்டீங்களா..?”
“ஓ.. சாப்புட்டேன்... தோ..” என்று தொடங்கியவர், “சப்பாத்தி” என்றார்.. இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
“நல்லவேளை... உங்களப் பாத்துட்டேன்.. நீங்க என்ன காலைல வந்து
ருக்கீங்க..”
“Mentorshipதான்... நான் ஒரு 20 பேருக்கு வழிகாட்டனும்... அவங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா தீர்த்து
வைக்கனும்... மையத்துல சொல்லாம
லேயே உனக்கும் அதத்தான் பண்ணிட்டு இருக்கேன்..”
“ஆமால்ல... நன்றிணா.. இப்போ பேச
லாமா..”
“இல்லல்ல... பிரேக்ல பாக்கலாம்” என்ற
வாறு நகர்ந்தார்.
படிக்க வந்து இடம் கிடைக்காத பலரும்
ஆங்காங்கே அமர்ந்து கொண்டிருந்தார்கள். தேர்வரும் ஒரு இடத்தைப் பிடித்து அமர்ந்தார். அருகில் சிரிப்பொலி கொஞ்சம் பலமாகத்தான் கேட்டது. ‘படிக்க வந்துட்டு, என்ன சிரிச்சுக்கிட்டு இருக்காங்க’ என்று ஓடத்தொடங்குகையில், “சரி அடுத்த கேள்வி
யைக் கேளு” என்று பேச்சைத் தொடர்ந்த
தைக் கண்டு, காதுகளைத் தீட்டிக் கொண்டார்.
“ஒரு கேள்வி இல்ல... நான் மூணு
கேள்வி கேப்பேன்... பதில் சொல்லிக்கிட்டே போ...”
“சரி... கேளு.. கேளு... கேட்டுட்டே போ..”
“விஜய் நடிச்சு அடுத்த வரப்போற படம்
என்ன..?”
“இதுதான் கேள்வியா...”
“பதிலச் சொல்லு... நேரம்லாம தர முடி
யாது..”
“கோட்.. (GOAT).. விஜயோட 68வது
படம்... இன்னும் ஒரு படம்தான் நடிக்கப்
போறாரு.. அப்புறமா முழுசா அர
சியல்தான்..”
“இந்திய அணியோட கேப்டன் யாரு..”
“ரோகித் சர்மா.. டி20க்கு சூர்யகுமார் யாதவ்..”
“மூன்றாம் பானிபட் போர் எப்போ நடந்துச்சு..?”
“முதல் போர் 1526... ரெண்டாவது 1556...
அச்சச்சோ... ஞாபகம் வரலியே.. முத ரெண்டு
கேள்வியும் ஈசியாக் கேட்டுட்டு இதுல சிக்க
வெச்சுட்டியே..”
“இங்கதான் நீ சிக்குற... அந்த ரெண்டு கேள்வில ஒரு கேள்வியே தப்பு..”
‘அட.. இதென்ன நடக்குது’ என்று தேர்வரின் புருவங்களும் உயர்ந்தன.
“என்ன தப்பு... விஜய் அரசியலுக்கு வர்றதுனால நடிக்கப் போறதில்ல... இந்திய
அணிக்கு ரோகித் சர்மாதான் கேப்டன்... டி-20ல அவரு ஓய்வு பெற்றதுனால அவ
ருக்குப் பதிலா சூரயகுமார யாதவப் போட்டு
ருக்காங்க.. அடுத்ததுதான் தெரியல..”
“மூணாவது 1761.. ரெண்டாவதா நான் என்ன கேட்டேன்.. இந்திய அணிக்கு கேப்டன் யாருன்னுதான கேட்டேன்..”
“ஆமா... நல்லாத்தான் காதுல விழுந்துச்சு..”
“வெறுமனே இந்திய அணினு சொன்னேன்... டென்னிசா.. கால்பந்தா.. பேட்மின்டனா.. செஸ்ஸா... எதப்பத்தியும் கவலைப்படல... ரோகித் சர்மானு சொன்ன... கிரிக்கெட் மட்டுமதான் நினை
வுக்கு வருது..”
“ஆமால்ல.. இப்புடித்தான் நாம தேர்வுக்கும் போறோம்... நம்மகிட்ட இருக்குற விடையோட போறோம்... அவங்க
என்ன கேக்குறாங்கன்னு கவலைப்படு
றதில்ல... நல்லாப் கேட்ட போ..”
வகுப்பறையை விட வெளிலதான் நமக்கு
வகுப்பு நடக்குதோ என்று தேர்வரின் சிந்தனை சிறகடிக்கத் தொடங்கியிருந்தது. சிறிது நேரத்தில் வந்த சீனியரிடம் நடந்த
தைச் சொல்லிக் கொண்டே பேக்கரியை நோக்கி அழைத்துச் சென்றார்.
“ரெண்டு லெமன் டீ... முழுப்பழமா புழிஞ்சுருங்க” என்று சொல்லிவிட்டு, “அண்ணா. இன்னிக்கு P... அப்புடினா என்ன... Passதான..”
“இல்ல... Pனா Proceed.. இப்பதான்
நாம வகுப்புல சேரப் போறோம்.., இவ்வ
ளவு நாள் வகுப்புல உட்காந்திருந்ததுல ஒண்ணு நல்லாப் பட்டுருக்கனும்... ஆசிரி
யர் நடத்துறப்ப ஒரு நாலஞ்சு பேரு, முந்திக்கிட்டு பதில் சொல்லிருப்பாங்களே..”
“ஆமா.. அதுல சில பேரு, அடுத்து அவர்
என்ன சொல்லனும்னு வேற சொல்லிட்டு இருந்தாங்க... சினிமாத் தியேட்டர்ல சில
பேரு அடுத்து என்ன சீன் வரும்னு சொல் லிட்டே இருப்பாங்களே... அது மாதிரி..”
“சரியாச் சொன்ன... அடுத்து அவங்க
ளுக்காக வகுப்பு நடக்க ஆரம்பிச்சுரும்... புதுசாச் சேந்தவங்களுக்கு எதுவுமே புரியாது..”
“Proceed பண்ண முடியாது... என்னோட
அனுபவமும் அதுதான்..”
“பெரும்பாலும் அவங்கள்லாம் பல ஆண்டு அனுபவம் உள்ளவங்களா இருப்
பாங்க.. அவஙகளோட சேந்து போகுற
துக்குதான், நாம ஏற்கனவே சொன்ன Understanding..”
“ஓகே... இப்போ Proceed பண்ணிக்க
லாம்.. அப்படித்தான..?”
“ஆமா.. வகுப்புல படிச்சத, வீட்டுல போய் திருப்பிப் பாக்குறது ஒரு வகை... இப்பல்லாம் திருப்புதலுக்கு யூடியூப் பயன்படுத்துறாங்க... ரொம்ப எளிமையா தேடிப் புடிச்சுற முடியும்... குறிப்பிட்ட வழி
காட்டியோட சேனல்னா, ரெண்டு, மூணு
வீடியோ பாத்த பிறகு, வெறும் பேசுறத மட்டும்
கேட்டாலே போதும்.. புரிஞ்சுக்கலாம்.”
“ஆன்லைன் வகுப்புகளுக்குப் போக
லாமா..?”
“போகலாம்... பொதுவா அதிகாலை... இல்லேனா மாலை அல்லது இரவு நடக்குற
வகுப்புகள் நல்லது... சில இணைய
தளங்களத் தொடர்ந்து பாக்கலாம்..”
“அதுல என்ன கிடைக்கும்..?”
“நடப்பு நிகழ்வுகள் அன்றாடம் கிடைக்கும்... மாதிரிக் கேள்விகள்... சின்னச்
சின்ன தேர்வுகள்.. அதப் பாக்குற
துக்குன்னு தனியா நேரம் ஒதுக்கி வெச்சுக்க
னும்.. ஒரு இணையதளத்தத் தொடர்ந்து பாத்தா போதும்... ரெண்டு, மூணு பாத்துட்டு
அப்புறம் நேரம் இல்லாம திணறக்கூடாது.”
“ஒண்ணு பாக்கவே நேரம் இருக் குமா..?”
“வேகமும் நமக்கு வரணுமே... நாட்கள்
போகப் போக, பாய்ச்சல் வேகம் தானா வந்துரும்..”
“இவ்வளவுதான் Proceedஆ?”
“இல்ல... கருத்தரங்கம், கூட்டங்கள்னு கலந்துக்கனும்..”
“கூட்டம்னா அரசியல் கட்சிக் கூட்டமா..?”
“இதுல என்னருக்கு... அந்தக்கூட்டத் துக்கும் போகனும்... டெபாசிட் கூட வாங்க மாட்டீங்கன்னு எதிர்க்கட்சிக்காரங்களப் பாத்து சவால் விடுறப்ப, டெபாசிட் எவ்வ
ளவு கட்டனும்... எவ்வளவு ஓட்டு வாங்குனா
டெபாசிட் திரும்பக் கிடைக்கும்னு கணக்குப் போட்டுட்டு இருக்கனும்..”
“ஆறுல ஒரு பங்கு ஓட்டு வாங்குனா
திரும்பக் கிடைக்கும்னு நான் படிச்சு
ருக்கேன்... ஒவ்வொரு தேர்தலுக்கும் டெபா
சிட் தொகை வேற வேறயா இருக்கு..”
“சரியாச் சொன்ன... கருத்தரங்கம் போனா, சுற்றுச்சூழல், பொருளியல்னு நிறைய விஷயம் கிடைக்கும்..”
“ஆமா.. அப்புடி ஒரு கருத்தரங்கத்துக்கு நான் போனப்பதான் இமயமலை இப்போ இருக்குற இடத்துல பெரிய கடல் இருந்
துச்சுனு தெரிஞ்சுக்கிட்டேன்... எவ
ரெஸ்டுல ஏறுறதுக்காகப் போறவங்க எண்ணிக்கை அதிகமா இருக்குறதுனால மலை மேல வரிசைல காத்துக்கிட்டு இருக்காங்களாம்..”
“சூப்பர்... இதெல்லாத்தையும் நம்ம பாடத்திட்டத்தோடு இணைச்சுக்கனும்..”
“கருத்தரங்கத்துலயோ அல்லது கூட்டத்துலயோ தோசை சுடுவாங்கதான்... நாமதான் சப்பாத்தியா மாத்திக்கனும்... சரி
தானே..?”
“ரொம்பச் சரி... மொழி..??”
“எனக்குத் தமிழ் நல்லா வரும்..”
“போதாது... ஆங்கில அறிவும் அவசி
யம்..”
“அலுவலகத்தில் இருக்கும்போதே உயிர்நீத்த குடியரசுத்தலைவர் யார்?”.. “ஒரு
முறை இப்புடி ஒரு கேள்வி இருந்துச்சு..”
“ஓ.. இப்புடி ஒரு சம்பவம் நடந்துச்சா?”
“இந்தக் குழபபம்தான் தேர்வு எழுதுன
வங்களுக்கு வந்துச்சு... ஆனா, ஆங்கி
லத்துல என்ன இருக்குனு பாத்துப் புரிஞ்சுக்
கிட்டவங்களுக்கு ‘டக்’குனு பதில் கிடைச்சுது..”
“அப்புடி என்ன இருந்துச்சு..?”
“Name the President who died
while in office” பதவியில் இருக்கும் போதே உயிர்நீத்தனு வரும்... அத மொழி
பெயர்ப்புல குழப்பிட்டாங்க.. நமக்கு ஆங்கிலம் தெரிஞ்சா விடையப் போட்டுட்டு அடுத்த வினாவுக்குப் போயிடலாம்..”
“அண்ணா... நான் Proceed பண்றேன்.. நாளைக்குப் பார்க்கலாம்..”