உதய்பூர், மே 6- கொரோனா பரவலால் பிறப்பிக் கப்பட்டுள்ள ஊரடங்கைத் தொட ர்ந்து, சூரத்தில் பணிபுரிந்த 18 வயது புலம்பெயர்ந்த தொழிலாளர் ராஜஸ் தானின் உதய்பூரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். தொற்று நோய்க்கு மத்தியில் தனது குடும்பத் திலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள, தனது வீட்டிற்கு அருகி லுள்ள ஒரு வேப்பமரத்தில் வசித்து வந்தார். ஆனால் ஊராட்சி நிர்வாக மும் அருகில் வசிப்பவரும் அந்த இளைஞரை கீழே இறக்கி வீட்டிற்கு வெளியே ஒரு கட்டிலில் தூங்கச் சொன் னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.