tamilnadu

img

கும்பகோணத்தில் உள் விளையாட்டு அரங்கம்

கும்பகோணத்தில் உள் விளையாட்டு அரங்கம்

கும்பகோணம் தொகுதியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். அதனை தொடர்ந்து கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் ரூ.3 கோடியில் உள் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலியில் அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், மாநகராட்சி துணை மேயர் மாநகரச் செயலாளர் சுப.தமிழழகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.