மதுரை,அக்.27- இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த வீரர் டி.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய அளவில் சச்சின் சிவா என அழைக்கப்படுகிறார். சிவாவின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள வீர சோழன். தற்போது மதுரை தெப்பக் குளம், மருது பாண்டியர் நகரில் வசித்து வருகிறார். இவர் 10 ஆம் வகுப்பு மதுரை தியாக ராஜா மாடல் பள்ளியிலும் 11,12 ஆம் வகுப்புகளை மதுரை சௌராஷ்ட்டிரா மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார். மதுரை வக்புவாரியக் கல்லூரியில் பி.காம்.படிப்பை இடையில் நிறுத்தி விட்டார். படிப்பை இடை நிறுத்தி யதற்குக் காரணம் கிரிக்கெட் மீதான ஆர்வம்தான் என்கிறார். தற்போது பலசரக்குக் கடை நடத்தி வருகிறார்.
சிறுவயது முதல் ஆர்வம்
இவர் பிறந்த ஆறு மாதத்திலேயே போலியோவால் கால் பாதிக்கப்பட்ட தால் சரியாக நடக்க முடியாமல் போனது. சிறுவயது முதல் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி வந்தார். பல நேரங்களில் புறக்கணிக்கப் பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் விளையாட்டிலேயே முழு கவனம் செலுத்தியுள்ளார். சிவாவை அவரது நண்பர்கள் ‘சச்சின்’ சிவா என அழைக்கத் தொடங்க இன்று அதுவே அவரது அடையாளமாக உள்ளது. பள்ளி, கல்லூரியில் தனது கிரிக் கெட் பயணத்தைத் தொடர்ந்த சச்சின் சிவாவிற்கு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் பற்றி 2013-ஆம் ஆண்டு தெரியவந்தது. இதனையடுத்து தனது சொந்த முயற்சியால் தமிழக அணியில் இடம்பிடித்த சிவா, குறுகிய காலத்தி லேயே தமிழக அணியை வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றார். இதனையடுத்து 2016-ஆம் ஆண்டு இந்திய மாற்றுத் திறனாளிகள் அணிக்காக விளை யாடும் வாய்ப்பு சிவாவுக்குகிடைத்தது. அதில் சிறப்பாக விளையாடி 2019-ஆம் ஆண்டு துணைக் கேப்ட னாக உயர்ந்தார். கடந்த மூன்று ஆண்டு களில் துணைக் கேப்டனாக அவர் புரிந்த சாதனைகள் அடிப்படையில் தற்போது இந்திய மாற்றுத்திறனாளி கள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
15 ஆண்டுகால உழைப்புக்கு பலன்
இதுகுறித்து நமது செய்தியாளரி டம் பேசிய சிவா, “எனது 15 ஆண்டு கால கடின உழைப்பு கைகொடுத்துள் ளது. நான் இந்திய அணியை வழிநட த்தப்போவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். மேலும் அவர் கூறுகையில், கடந்த 14 ஆண்டுகளாக கிரிக்கெட் விளை யாடி வருகிறேன், 12 ஆண்டுகளாக தமி ழக அணியிலும் கடந்த ஆறு ஆண்டு களாக இந்திய அணியிலும் விளை யாடி வருகிறேன்.இத்தனை ஆண்டு கள் இந்திய அணிக்காக விளையாடி னாலும் சரியான தருணத்தில் கேப்டன் என்ற அங்கீகாரம் கிடைத்துள் ளது. இருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு உள்ள அங்கீகாரம் எங்க ளுக்கு இல்லை. வெற்றி பெற்றால் விருது, விளையாட்டில் பங்கேற்கும் போது ஊதியம், சாதனையாளர் களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊதியம் எங்களுக்கு கிடைப்பதில்லை. இந்திய கிரிக்கெட் சங்கம் போன்று எங்களுக்கு வருமானம் இல்லை.
அணி யில் 90 பேர் உள்ளனர். இவர்கள் போட்டி களில் பங்கேற்க வேண்டுமென்றால் வேலைபார்க்குமிடத்தில் விடுமுறை கிடைக்க வேண்டும். விடுமுறை கிடைக்காவிட்டால் வேலையை விட்டு விட்டுத்தான் வரவேண்டும். மீண்டும் வேலை கிடைக்கும் என்ற உத்தர வாதம் இல்லை. இதனால் பல மாற்றுத்திற னாளிகள் போட்டிகளில் பங்கேற்க மறுக்கின்றனர். வருகிற ஜனவரி 20,21,22 ஆகிய தேதிகளில் இந்தியா-இலங்கைக்கான போட்டி தமிழகத்தில் நடைபெற வுள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்து பிடிப்பது மட்டுமல்ல, ஸ்பான்சர்களையும் தேடிப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டியை தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சென்னை சேப்பாக்கம் மைதா னத்தில் நடத்த வேண்டுமென்ற ஆசை உள்ளது. இதற்காக தமிழக முதல்வரி டம் கோரிக்கை வைக்க உள்ளேன். தமிழக அரசும், ஒன்றிய அரசும் இந்திய அளவிலும், மாநில அளவிலும் கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைத்து வரும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பும், உதவித் தொகையும் வழங்க வேண்டும் என்று சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சு.வெங்கடேசன் எம்.பி., வாழ்த்து
அக்டோபர் 27 வியாழனன்று சிவக் குமார், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் எஸ்.கண்ணன், மா.கணேசன் உள்ளிட் டோரைச் சந்தித்தார். சு.வெங்கடேசன் எம்.பி. மற்றும் கட்சித் தலைவர்கள் சிவக்குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். வீரசோழன் கிராமத்தில் பிறந்து இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந் துள்ள சிவக்குமார் மதுரைக்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அதுமிகையல்ல.