tamilnadu

img

அறிவு சார்ந்த தொழில்கள் துவங்குவதில் கேரளம் பாய்ச்சல் வேக வளர்ச்சி

திருவனந்தபுரம், டிச. 1- டிஜிட்டல் பல்கலைக்கழக வளா கத்தின் தொடர்ச்சியாக டிஜிட்டல் அறி வியல் துறையில் கவனம் செலுத்தும் கேரளத்தில் இந்தியாவின் முதல் டிஜிட்டல் பூங்கா அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ண றிவு, பிளாக் செயின், மருத்துவ மின்ன ணுவியல், மருத்துவப் பொருட்கள், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் மின்ன ணுவியல் வன்பொருள் தொடர்பான பகுதிகள் போன்ற டிஜிட்டல் தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தும் இந்தி யாவின் முதல் பூங்கா இதுவாகும். அறி வியல் பூங்காக்கள் ஹார்வர்டு பல் கலைக்கழகம் உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த கல்வி மையங்களின் ஒரு பகுதி யாகவும், சென்னை உள்ளிட்ட சில ஐஐடி களின் கீழும் உள்ளன.

கேரளாவில் பல அறிவுசார் தொழில்களை தொடங்கவும் இந்த பூங்கா உதவும். வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் உட்பட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இங்கு வந்து தொழில்நுட்பத்தை முழுமை பெறச்செய்யலாம். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாநிலத்தில் நிறுவனங்களைத் தொடங்கலாம். சிறிய, நடுத்தர நிறு வனங்கள், அமைப்புகள் மற்றும் நிபுணர்களுக்கு ஒருங்கிணைந்த பணி வசதிகளை வழங்குதல், காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்புகளை (அறிவுசார் சொத்துரிமை) நடைமுறை நிலை நிறுவனங்களுக்கு எடுத்துச் செல்ல தேவையான உட்கட்டமைப்பும் வழங்கப்படும். தொழில்நுட்ப கண்டு பிடிப்புகளுக்கான முதலீட்டின் பெரும் பகுதியை டிஜிட்டல் பூங்கா மூலம் எதிர்கொள்ள முடியும் என டிஜிட்டல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். சஜி கோபிநாத் கூறினார். டிஜிட்டல் துறையில் நான்கு விஷ யங்களில் முக்கிய கவனம் செலுத்தப் படும். மின்னணு தொழில்நுட்பம், தொழில் கள் 4.0 தொடர்பான தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்முனைவு போன்ற துறை களில் புதிய முன்னேற்றங்களை பொது மக்களுக்கு அறிமுகப்படுத்த டிஜிட்டல்  அனுபவ அரங்கில் பூங்காவின் கவனம் செலுத்தப்படும்.

ரூ.1,515 கோடியில் ஆராய்ச்சி மையம்

கேரள டிஜிட்டல் பல்கலைக்கழ கத்தின் கீழ் டிஜிட்டல் அறிவியல் பூங்கா நிறுவப்படும். யோசனைகளை தயாரிப்புகளாக மாற்றும் மொழி பெயர்ப்பு ஆராய்ச்சி மையமாக பூங்கா  செயல்படும். ரூ.1,515 கோடி மதிப்பி லான திட்டத்திற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரூ.200 கோடி அரசால் அனுமதிக்கப் படும். கிப்பி மூலம் ரூ.975 கோடி கண்ட றியப்படும். தொழில் பங்குதாரர்கள் உள்ளிட்ட வழிகளில் மீதி தொகை ஈட்டப் படும். பொது-தனியார் கூட்டுத் திட்டத் தில் ஒன்றிய அரசும் தொழில்துறையும் ஒத்துழைக்கும். திருவனந்தபுரத்தில் உள்ள டிஜிட்டல் பல்கலைக்கழக வளா கத்தை ஒட்டி, டெக்னாசிட்டியில் 14  ஏக்கர் பூங்கா மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். முதற்கட்டமாக ரூ.200  கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள்  செய்து தரப்படும். புதிய தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும், இதற்காக பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பணியாற்றவும் நிறுவனங் களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளை இந்த பூங்கா வழங்கும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சாதனைகளைப் பயன் படுத்துவதற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.1000 கோடி முதலீட்டில் நான்கு  அறிவியல் பூங்காக்கள் அறிவிக்கப் பட்டன. இவற்றில் முதலாவது டிஜிட்டல் அறிவியல் பூங்கா, வேலை வாய்ப்புத் துறை உட்பட பல்வேறு புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. திரு வனந்தபுரம், கொச்சி மற்றும் கண்ணூர்  சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் இரண்டு அடுக்கு அறிவியல் பூங்காக்களும் திட்டமிடப்பட்டுள்ளன.