tamilnadu

img

சிறு-குறு நிறுவனங்களை நெருக்கடியில் தள்ளிய மின் கட்டண உயர்வு

சென்னை, நவ. 25- மின் கட்டண உயர்வைக் கண்டித்து  அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில்களின் கூட்டமைப்பு சார்பில் வெள்ளியன்று (நவ. 25) உண்ணாநிலை போராட்டம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடைபெற்றது. இதுகுறித்து அம்பத்தூர் தொழிற் பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தி.நலங்கிள்ளி கூறுகையில், “மின்சார கட்டணம் பலமுறைகளில் உயர்த்தப்பட்டுள்ளது. அதில் முக்கிய மாக நிரந்தர கட்டணம் (பிக்சட் சார்ஜஸ்) என்பது 4 மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. இதனால் நிறுவனம் நடத்தினாலும், நடத்தவில்லை என்றாலும் ஒரு  குறிப்பிட்ட தொகையை கட்டாயமாக  செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவா கியுள்ளது. மேலும் நலிவடைந்த கம்பெனிகள் நிரந்தரமாக மூட வேண்டிய நிலை ஏற்படும். இதனால் லட்சக்கணகான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். கொரோனா தொற்றின் காரணமாக  கடந்த இரண்டரை ஆண்டுகளாக குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எண்ணற்ற இன்னல்களை சந்தித்து வருகின்றன. இந்தத் தொழிலை நம்பி வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் பலர் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மின்சார வாரியம் மின்கட்டண உயர்வை அறிவித்தது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனு மதிகேட்டு மூன்று மாவட்டங்களில் தொழில் அமைப்புகள் மற்றும் பொது மக்களுடைய கருத்துகேட்பு நடத்தினார்கள். ஆனாலும் மின்சார கட்டணம்  உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழில் முனைவோரும் செய்வதறியாமல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இனி இந்த தொழிலில் நாம் ஈடுபடமுடியுமா என்ற அச்சத்தில் உள்ளனர். குறைந்த மின் அழுத்த நிறுவனங்க ளுக்கு 0 முதல் 50 கிலோவாட் உபயோ கப்படுத்தும் தொழிற்சாலைக்கு ரூ. 35இல் இருந்து ரூ. 150ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 50 முதல் 112 கிலோவாட் வரை உபயோகப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு ரூ. 300 என்றும்,112 கிலோவாட்க்கு மேல்  உபயோகப்படுத்தும் எச்டி தொழிற்சாலைகளுக்கு ரூபாய் 35  என்பதை ரூ. 550ஆக உயர்த்தி யிருப்பதை குறைக்க வேண்டும் . குறைந்த மின்னழுத்த நிறுவ னங்களுக்கு தற்போது அமல்படுத்தி யுள்ள பீக்ஹவர் கட்டணம், காலை 6 மணிமுதல் 10 மணிவரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை உபயோகப்படும் மின்சாரத்திற்கு 15 விழுக்காடு கட்டணம் அதிக மாக வசூலிக்கின்றனர். இதனை  உடனடியாக திரும்பப் பெறவேண்டும். தமிழகத்தில் மின்சாரம் தன்னி றைவு பெற்றதாக கூறும் போது, பீக்ஹவர் சர்சார்ஜ் அமல்படுத்துவது நியாயமற்றது. எனவே இந்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

;