tamilnadu

img

கர்ப்பிணிப் பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்த வேண்டும்.... ஒன்றிய சுகாதார அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்...

மதுரை:
கர்ப்பிணிப் பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரைநாடாளுமன்ற  உறுப்பினர் சு. வெங்கடேசன்கடிதம் எழுதியுள்ளார்.

அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தடுப்பூசிகளை அனைவருக்கும் செலுத்தி, மூன்றாம் அலை பெருமளவில் மக்களைத் தாக்காமல் இருக்க வேண்டும் என்ற  எண்ணத்துடன் நாடே நகர்ந்துக் கொண்டிருக்க, கர்ப்பிணிப் பெண்களின் நலன் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கர்ப்பிணிப் பெண் கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் எப்போதுமே தனிக் கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள். கர்ப்பிணிப் பெண்களில் யார் தொற் றுக்கு ஆட்படுவார்கள்?  அல்லது பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள்? என்பதை கணிப்பது கடினம். ஆகையால் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.இப்போது நம்மிடைய இருக்கும் தடுப்பூசிகள், கர்ப்பிணிப் பெண்களில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற் கான தெளிவான வரையறை இதுவரை நம்மிடம் இல்லாமல் இருந்தது.  இருப்பினும் சமீபத்திய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) தடுப்பூசிகளைப் பயன் படுத்துவது  பாதுகாப்பானது என அறிவுறுத்தியுள்ளது.
வாய்ப்பு இருப்பின் mRNA வகை பிரிவைச்சேர்ந்த  ’ஃபைசர்’ தடுப்பூசிகளை வாங்கி கர்ப்பிணிகளுக்கு கொடுப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம். ஃபைசர் தடுப்பூசிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பானது என பல ஆதாரங்கள் நிரூபிக் கின்றன.

ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் கர்ப்பிணிகள் அரசாங்கத்தில் பதிவு செய்கின்றனர். அவர்களை கணக்கெடுத்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். கர்ப்ப காலத்தின் நடு மூன்று மாதங்கள் மற்றும் கடைசி மூன்றுமாதங்களில் பெரும்பாலான கர்ப்பிணிகள் பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. எனவே முதல் மூன்று மாதங்களில் அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு முயலலாம். முதல் மூன்று மாதங்களைக் கடந்தும் தடுப் பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி செலுத்த அறிவுறுத்துவது கட்டாயம். FOGSI மற்றும் FIGO போன்ற அமைப்புகள் கர்ப்பிணிகளின் தடுப்பூசிகள் குறித்து கருத்துக் களையும் வழிகாட்டுதல்களையும் வெளி
யிட்டிருக்கின்றன. 

விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் செப்டம்பர் மாத மத்தியில் மூன்றாம் அலைதாக்கும் என்று எச்சரித்திருக்கும் சூழலில், கர்ப்பிணிகள் மீது அதீத கவனம் செலுத்துவது முக்கியம். கர்ப்பிணியோடு சேர்த்து, கருவிலிருக்கும் சிசுவிற்கும் பாதுகாப்பு அளிப்பது முக்கியத்துவம் பெறுகிறது.முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிசெலுத்தியதைப் போல, கர்ப்பிணிகளுக்கும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக செலுத்த வேண்டும். ஆதலால் உடனடியாக தமிழகக் கர்ப்பிணிப் பெண் களுக்கு உதவிட முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகளை அனுப்பித்தந்திட வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;