tamilnadu

கூட்டுறவு நூற்பாலைகளில் மின்னணு பொறியாளர் காலிப்பணியிடம் கைத்தறி துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

மதுரை, ஜூன் 11- தேனி, தூத்துக்குடி கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலைகளில் மின்னணு பொறியாளர் பணியிடம் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து, மின்னணு பொறியியல் துறையில் பட்டயப் படிப்பு படித்தவர்களும் விண்ணப் பிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடக் கோரி வழக்கில் தமிழக கூட்டுறவு துறை இயக்குனர் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட் டையைச் சேர்ந்த முனியசாமி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.  அதில், “நான் மின்னணு பொறியியல் துறையில் பட்டயப் படிப்பு முடித்துள்ளேன். கடந்த மார்ச் 12,13- ஆம் தேதிகளில் தேனி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, கன்னியா குமரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்க ளில் கூட்டுறவு நூற்பாலைகளில் மின் னணு பொறியாளர் பணியிடம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண் ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டி ருந்தது. இதுதொடர்பாக விளக்கம் கேட்ட தற்கு பட்டம் பெற்றவர்களை நவீன முறை களை கையாளும் திறன் பெற்றிருப்பார்கள் என்பதுபோல விளக்கமளிக்கப்பட்டது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே தேனி, தூத் துக்குடி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற் பாலைகளில் மின்னணு பொறியாளர் பணி யிடம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறி விப்பை ரத்து செய்தது.

;