தூத்துக்குடி, மே 31-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றததை தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி., அளித்தபேட்டியில் கூறியதாவது,தூத்துக்குடி தொகுதி எம்பி.,யாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தண்ணீர் இல்லாத நேரத்தில் குளங்களை தூர்வார வேண்டும், குடிநீர் பிரச்சனைகளுக்கு முன்னிறுத்தி நடவடிக்கை எடுப்பேன். வெற்றி பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.அனைவரையும் அரவணைத்து கொண்டு இந்தியா என்பது எல்லோருக்கும் சொந்தம் என்ற அந்தஉணர்வை ஏற்படுத்தும் அரசாங்கத்தை உருவாக்கி பிரதமர் மோடி நடத்த வேண்டும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வர வேண்டும், பொருளாதாரத்தில் இருக்கக் கூடிய சரிவு நிலையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் சரி செய்யும் முயற்சியைஎடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கூறினார்.பின்னர் கனிமொழி தூத்துக்குடிமாவட்ட முன்னாள் திமுக மாவட்டசெயலாளர் பெரியசாமி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மறைந்த தலைவர்களான முத்துராமலிங்க தேவர், அம்பேத்கர், பெரியார், குருஸ்பர்னாந்திஸ், அண்ணா, காமராஜர், வ.உ.சி,இந்திராகாந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன் பிறகு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பிரச்சார வாகனத்தில் புறப்பட்டு போல் பேட்டை மேற்கு, குறிஞ்சி நகர், போல் பேட்டை கிழக்கு, செல்வநாயகபுரம், டிஎம்சி காலனி,ஸ்டேட் பேங்க் காலனி ரோடு, சக்திவிநாயகபுரம், அம்பேத்கர் நகர்,கந்தசாமிபுரம், நந்த கோபால புரம், நந்தகோபால புரம்கிழக்கு, நடராஜபுரம், அழகேசபுரம், பாண்டுரங்கன் தெரு, வண்டிமறிச்சி அம்மன்கோயில் தெரு, காந்தி சிலை,எஸ்எஸ் பிள்ளை தெரு, முத்துகிருஷ்ணாபுரம். கிருஷ்ணராஜபுரம், வட்ட கோவில் சந்திப்பு, கிருஷ்ணராஜபுரம் 5வது தெரு கிருஷ்ணராஜபுரம் மெயின், கருப்பட்டி ஆபீஸ் ரவுண்டானா, பூபால் ராயபுரம் இரண்டாவது தெரு, பூபால் ராயபுரம், எஸ் எஸ் மாணிக்கபுரம், லூர்தம்மாள்புரம், மேட்டுப்பட்டி சந்திப்பு, திரேஸ்புரம், குரூஸ் புரம், புதுத்தெரு, மட்ட கடை 1ம்கேட், காசுக்கடை பஜார், சிவன்கோயில் தெரு, கீழ ரத வீதி,வடக்கு ரத வீதி கீழ ரெங்கநாதபுரம், எட்டயபுரம் ரோடு, குரூஸ் பர்னாந்து சிலை, பால விநாயகர் கோவில் தெரு, டபுள்யு ஜிசி ரோடு,விவிடி ரோடு, அண்ணா நகர் 3வதுதெரு, 4வது தெரு, டூவிபுரம் 3வதுதெரு, ஜெயராஜ் ரோடு, டூவிபுரம் 5, மற்றும் 4வது தெரு, அண்ணா நகர் 8வதுதெரு, அண்ணா நகர் 12வது தெரு, கே வி கே நகர் மேற்கு ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் ராஜா,ஒன்றிய செயலாளர் சங்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரா. பேச்சிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர் எம். எஸ்.முத்து,திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன், மாநில திமுகபொதுகுழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் மாநகர காங்கிரஸ் தலைவர் முரளி,மாநகர மதிமுக செயலாளர் பூபதி, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.