tamilnadu

img

டெலிட் ஆன கூகுள் போட்டோக்களை மீட்பது எப்படி?

டெலிட் ஆன கூகுள் போட்டோக்களை மீட்பது எப்படி?

கூகுள் போட்டோஸ் (Google Photos) செயலியில் போட்டோவையோ அல்லது வீடியோவையோ நாம் தவறுதலாக டெலிட் செய்தால், அதனை ட்ராஷில் (Trash) இருந்து 30 நாட்களுக்குள் மீட்டெடுக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதுவே கூகுள் ஸ்டோரேஜில் சேமித்து வைத்திருந்தால், டெலிட் ஆன போட்டோ அல்லது வீடியோவை டிராஷில் இருந்து 60 நாட்க ளுக்குள் மீட்டெடுக்க முடியும். ட்ராஷில் இருந்து போட்டோக்களை மீட்டெடுக்க இந்த வழிமுறைகளை மேற் கொள்ள வேண்டும்: 1) முதலில் கூகுள் போட்டோஸ் செயலியில் திறந்த உடன் கீழ் வலது மூலையில் காணப்படும் லைப்ரரி (Library) டேபை கிளிக் செய்தால், அதில் ட்ராஷ் ஆப்ஷன் காண்பிக்கும். ஒரு சில ஆண்ட்ராய்ட் சாதனங்களில் ட்ராஷ் ஆப்ஷன், ஒரு சப்-மெனுவின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும்.  2) ட்ராஷ் (Trash) ஆப்ஷனை டேப் செய்ததும் நீங்கள் சமீபத்தில் டெலிட் செய்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை காண முடியும். 3) அதிலிருந்து நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் போட்டோ அல்லது வீடியோவை தனி தனியாகவோ அல்லது ஒரே நேரத்திலோ  செலக்ட் (Select) செய்து ரீஸ்டோர் (Restore) பட்டனை கிளிக் செய்து மீட்டெடுக்க முடியும். நீங்கள் மீட்டெடுக்கும் போட்டோ அல்லது வீடியோ உங்கள் கூகுள் போட்டோஸ் லைப்ரரியில் மீண்டும் சேமிக்கப்படும்.

ரோபோவின் உடலில் மனித ஸ்டெம் செல்

மனித ஸ்டெம் செல்களில் (Stem Cells) இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய ஆர்கனாய்டை (organoid) ஒரு  ரோபோவின் உடலில் பொருத்தி சீன ஆராய்ச்சி யாளர்கள் குழு வடிவமைத்துள்ளது. சீனாவில் உள்ள தியான்ஜின் பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். மனித ஸ்டெம் செல்களில் இருந்து உருவாக்கப்படும் ஆர்கனாய்டை neural interface chip உடன் இணைத்து, ரோபோவை இயக்க கட்டளைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த ரோபோ தடைகளைத் தவிர்க்கவும், இலக்குகளைக் கண்காணிக்கவும், அதன் கை அசைவுகளை நிர்வகித்து பொருட் களைப் புரிந்து கொள்ளவும் கற்றுக்கொள்வ  தாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் 92% அலுவலகங்களில் சாட் ஜிபிடி பயன்பாடு!

இந்தியாவில் 92% அலுவலகங்களில் சாட்ஜிபிடி (ChatGPT) பயன்படுத்தப்படுகிறது என்பது டெஸ்க் டைம் (DeskTime) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.  ஓபன்-ஏஐ (OpenAI) நிறுவனம் உருவாக்கிய செயற்கை நிண்ணறிவு தளமாக சாட்ஜிபிடி பயனர்களின் பல்வேறு கேள்விகளுக்கு புகைப்படம், ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் பதில்களை வழங்குகிறது. தேவைக்கேற்ப படங்களை உருவாக்குவது. மேலும் தனிப்பட்ட பிரச்சனைகள் பற்றிய ஆலோசனைகளையும் வழங்குகிறது. இந்த சூழலில், இந்தியாவில் 92% அலுவலகங்களில் அதன் தினசரி செயல்பாடுகளில் சாட்ஜிபிடி-யை ஒருங்கிணைத்து பயன்படுத்தப்படுகிறது என்பது டெஸ்க் டைம் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.  ஜனவரி 2023 முதல் மார்ச் 2024 வரையில், நாடு முழுவதும் உள்ள 297 நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 14,818 ஊழியர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆய்வுக்கு  டெஸ்க் டைம்  டிராக்கிங் கருவி மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மார்ச் 2024 வரை, இந்தியாவில் அலுவலகங்களில் 42.6 சதவிகித ஊழியர்கள் சாட்ஜிபிடி-யை பயன்படுத்தி வருகின்றனர். இது முந்தைய ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும். 95.5 சதவிகித இந்திய நிறுவனங்கள், சாட்ஜிபிடி-யை உற்பத்தித்திறன் கருவியாகப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டு ஊக்குவித்து வருவதாகவும், பணியிடத்தில் ஏஐ கருவிகளைப் பயன்படுத்துவதில் இந்திய ஊழியர்கள் முன்னணியில் உள்ளனர் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.