மதுரை, ஜூலை 3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை செல்லூர் பகுதிகுழு சார்பில் செல்லூர் மார்க்கெட் பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு ஹோமி யோ மருத்துவ முகாம் நடைபெற்றது. தாணு ஹோமி யோ மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள் மீனாட்சி சுந்தரம், பாண்டிராஜன், நிவேதா,ரேவதி, தமிழ் வாணன், யாழினி ஆகியோர் மக்களுக்கு தடுப்பு மருந்து கள் வழங்கினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. ராதா, பகுதிகுக்குழுச் செயலாளர் ஜா. நரசிம்மன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் கா. திலகர், பா. பழனியம்மாள், பாலசுப்பிரமணியன், ஆறுமுக பெரு மாள், ஜான்சி, காயம்பும்மாள், ஜாகிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.