‘எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி
உலக தாய்மொழி நாள் (பிப். 21) கொண்டாடப்படும் நிலையில், முன்னாள் முதல்வர் கலைஞர் செம் மொழி மாநாட்டையொட்டி எழுதிய பாடலை, தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி. இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம். அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி. உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி” என்று குறிப்பிட்டுள்ளார்.