சென்னை, ஏப்.23- “இளைஞர்களுக்கு வேலை கொடு” என்ற முழக்கத்தோடு சுட்டெரிக்கும் வெயி லையும் பொருட்படுத்தாமல் வாலிபர்கள் தங்களது 3வது நாள் சைக்கிள் பிரச்சாரத்தை தொடர்ந்தனர். சென்னை, புதுச்சேரி, கோவை, கன்னியா குமரி ஆகிய 4 முனைகளிலிருந்து திருச்சி நோக்கி 3000 கி.மீ சைக்கிள் பயணம் ஏப். 21 அன்று தொடங்கியது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்த பிரச்சாரத்தை மேற் கொண்டுள்ளது.
சென்னை
சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமையிலான சென்னை குழுவினர் சனிக்கிழமையன்று (ஏப்.23) தென்சென்னை மாவட்டம், கோயம்பேட்டிலிருந்து 3வது நாள் பிரச்சாரத்தை தொடங்கினர். இந்த பிரச்சா ரத்தை சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலா ளர் ஆர்.வேல்முருகன், சென்னை மாவட்டச் செயலாளர் க.பீம்ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்தக்குழு விருகம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்க நல்லூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொ டது. பிரச்சாரக் குழுவினரை ஆட்டோ, முறை சாரா தொழிலாளர்கள், பெண்கள் என பலதரப் பினரும் ஆங்காங்கே நின்று வரவேற்றனர். தரமணியில் மும்மதத்தினரும் இணைந்து ஆரத்தி எடுத்து, தேங்காய் உடைத்து வரவேற் பளித்தனர். நரிக்குறவ மக்கள் வாழை, தர் பூசணி உள்ளிட்ட பழங்களை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். கிண்டி அருகே இந்திய மாண வர் சங்கத்தினர் மாலை அணிவித்து, பழச்சாறு கொடுத்து வாழ்த்து முழக்கமிட்டனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் ச.லெனின், கே.வனஜகுமாரி, பகுதிச் செயலாளர்கள் இ.ரவி (விருகம்பாக்கம்), இ. மூர்த்தி (தி.நகர்), ஜி.வெங்கடேஷ் (சைதை), எஸ்.முகமது ரஃபி (வேளச்சேரி), வெங்க டேசன் (ஆலந்தூர்), எம்.சி.பிரபாகரன் (பல்லா வரம்), தா.கிருஷ்ணா (தாம்பரம்) உள் ளிட்டோர் தலைமையில் ஆங்காங்கே வர வேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொட ர்ந்து பயணக்குழு காஞ்சிபுரம் மாவட்டத் திற்குள் சென்றடைந்தது.