tamilnadu

img

அரசுப் பள்ளிக்கு ரூ. 10 லட்சம் எம்எல்ஏ ஒதுக்கீடு

சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கொடிப்பள்ளம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் பெஞ்ச், டெஸ்க் மற்றும் தளவாட பொருட்களை கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ., பள்ளியின் தலைமை ஆசிரியர் மோகன்தாஸிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், குமார், டேங்க் ஆர்.சண்முகம், தில்லை கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம் வீனஸ் கல்வி குழுமத்தின் தில்லை நகர் மேல்நிலைப் பள்ளி, தேரடி தெரு மழையர் மற்றும் தொடக்கப் பள்ளி, அம்மாபேட்டை தொடக்கப்  பள்ளிகளில்  காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் வீனஸ் குமார்  தலைமை தாங்கினார்.  குமராட்சி வட்டார கல்வி அலுவலர்கள் நடராஜன், மோகன், முன்னாள் வட்டார கல்வி அலுவலர்கள் முத்து, சுகுமார்,  மூத்த பத்திரிகையாளர் தணிகை தம்பி உள்ளிட்ட பலர் கலந்த கொண்டனர்.