tamilnadu

img

வீடற்ற மீனவர்களுக்கு அரசே வீடுகட்டித் தருக.... உள்நாட்டு மீனவர் கோரிக்கை மாநாடு வலியுறுத்தல்....

நாகர்கோவில்:
வீடற்ற அனைத்து மீனவர்களுக்கும் அரசே நிலம் வழங்கி வீடுகட்டித்தர வேண்டும் என நாகர்கோவிலில் நடந்த கன்னியாகுமரி மாவட்டஉள்நாட்டு மீனவர் கோரிக்கை மாநாடு வலியுறுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட உள்நாட்டு மீனவர் கோரிக்கை மாநாடு நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய வளாகத்தில் கன்னியாகுமரி மாவட்ட உள்நாட்டு மீனவர் ஒருங்கிணைப்பு மையம் சார்பில் நடைபெற்றது. மாநாட்டிற்கு, மாவட்ட தலைவர் எஸ்.அந்தோணி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் எஸ்.வேல்முருகன் வரவேற்றார். கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.வி.பெல்லார்மின் , குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் ஜேசுரத்தினம், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.சுரேஷ் ராஜன், ஆஸ்டின் உள்ளிட்டோர் பேசினர்.

தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ஜி.செலஸ்டின், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலகுழு மாநில பொருளாளர் அகமது உசேன், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கி முத்து, அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஜாண் தங்கம், எஸ்.எ.அசோகன், உள்நாட்டு மீனவர் ஒருங்கிணைப்பு மைய பொருளாளர் டன்ஸ்டன் ரமேஷ் ஆகியோர் பேசினர்.

இதில், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், உள்நாட்டு மீனவர்கள் திரளாக கலந்துகொண்டனர். மாநாட்டில், உள்நாட்டு மீனவர்களின் உண்மையான எண்ணிக்கை யை அறிய மீனவ பிரதிநிதிகளின் உதவியுடன் புதிய கணக்கெடுப்பை நடத்த வேண்டும், மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மீன் பாசி குத்தகை தொடர்ந்து வழங்க வேண்டும், உள்நாட்டு மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்று உடனுக்குடன் நிறைவேற்ற ஏதுவாக நாகர்கோவிலில் சக பணியாளர்களு டன் தனி உதவி இயக்குநர் அலுவலகம் 2013 ஆம் ஆண்டு செயல்பட்டதை போல மீண்டும் செயல்படுத்த வேண்டும், மீனவர் நல வாரியத்திற்கு என்று தனியாக அலுவலர் அலுவலகம் அமைத்து இதர வாரியங்களை போல் செயல்படுத்த வேண்டும், நிதி சலுகைகளை யும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

;