tamilnadu

img

இயற்கையை நேசிப்போம்! - கு.மணி

கடவுளின் தேசம் இன்று பாப்பா!
கண்ணீர் தேசமானதடி பாப்பா!
கண்மூடித் தூங்கியவர் பாப்பா!
மண்மூடிப் போயினரே பாப்பா!

 ஒரு நாள் மழையினிலே பாப்பா!
 உறங்கிக் கிடந்த மானுடம் பாப்பா!
 வினாடிக்குள் விழுங்கப்பட்டதே பாப்பா!
 வயநாட்டை வாரிச் சுருட்டியதே பாப்பா!

 ஒப்பாரிக் குரல்களாய் பாப்பா!
 ஓலமிடும் சப்தங்களாய் பாப்பா!
 உயிரை உறிஞ்சி விட்டு பாப்பா!
 தாய்மண் துப்பிய சடலங்கள் பாப்பா!

 செங்குருதி கலந்ததனால் பாப்பா!
 செந்நிறமானதே சாலியாறு பாப்பா!
 மலையாள தேசத்தில் பாப்பா!
 மனம் மகிழ்வு போனதடி பாப்பா!

 ஆற்றின் கரையோரம் பாப்பா!
 அள்ள அள்ள சடலங்கள் பாப்பா!
 சுடுகாடுகள் இடமாறி பாப்பா! 
 இடுகாடுகள் ஆனதடிப் பாப்பா!

 இயற்கையுடன் போட்டியடி பாப்பா!
 இயற்கையே வென்றதடி பாப்பா!
 இது போலொரு நிகழ்வடி பாப்பா!
 இனியும் நடக்கக் கூடாதடி பாப்பா!

 இதுவும் கடந்து போகுமடி பாப்பா!
 இனியொரு விதி செய்வோம் பாப்பா!
 இயற்கையை நேசிப்போம் பாப்பா!
 இடர்களை தவிர்த்திடுவோம் பாப்பா!