tamilnadu

img

நம்பிக்கையுடன் முன்னேறி உலகை வெல்லுங்கள்

சென்னை, மே 8- “நம்பிக்கையுடன் முன்னேறிச் சென்று உலகை  வெல்லுங்கள்” என்று 12 ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளி யிட்டுள்ள பதிவில், “பன்னி ரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக முக்கியக்  கட்டத்தை நோக்கி அடியெ டுத்து வைக்கும் மாணவச்  செல்வங்கள் அனைவருக் கும் பாராட்டுகள், வாழ்த்து கள். இந்த முறை தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர  வேண்டாம். வெற்றிக்கு இன்னும் ஒரு அடிதான். நீங்க ளும் விரைவில் வெற்றி பெற  வாழ்த்துகிறேன். நமது அரசு  ‘நான் முதல்வன் திட்டம்’ உள்ளிட்ட திட்டங்களை உங்கள் உயர்க்கல்விக்கு வழி காட்ட வகுத்திருக்கிறது. நம்பிக்கையுடன் முன் னேறிச் செல்லுங்கள்! உலகை வெல்லுங்கள்! இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பாராட்டு கள், வாழ்த்துகள்.