விருதுநகர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு அவசர காலப் பிரிவு அருகே குப்பைகள் நிரம்பிய காத்திருப்போர் கூடம்
விருதுநகர், அக்.28- விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு அருகே உள்ள காத்திருப்போர் கூடத்தில் குப்பை கள் நிரம்பி காணப்படுகின்றன. இதனால், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் இராமமூர்த்தி சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இச்சாலையில் தெற்கு பகுதியில் அவசரகால மகப்பேறு பிரிவு செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே தீவிர குழந் தைகள் சிகிச்சைப் பிரிவும் உள்ளது. இங்கு, விருதுநகர் மாவட்டம் முழுவதுமிருந்து சாதாரண ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பிரசவத்திற்காக வரு கின்றனர். அவர்களுடைய உதவிக் காக உறவினர்களும் மருத்துவ மனைக்கு வருகை புரிகின்றனர். பிரசவித்த தாய்மார்களுடன் ஒருவர் மட்டுமே தங்குவதற்கு அனு மதியுண்டு. மற்றவர்கள், மருத்துவ மனை வளாகத்தில் உள்ள மரத்தடி யிலும், தரையிலும் வேறு வழி யின்றி அமர்ந்துள்ளனர். மேலும், அதே வளாகத்தில் உள்ள சிறிய அளவிலான காத்தி ருப்போர் கூடத்திலும் பலர் தங்கி யுள்ளனர். ஆனால், காத்திரு போர் கூடமோ, சுத்தம் செய்யா மல் எப்போதும் குப்பைகளுடன் காணப்படுகிறது. அங்குள்ள குப்பைகளைச் சிறுவர், சிறுமிகள் கையில் எடுத்து விளையாடு கின்றனர். மேலும், காத்திருப்புக் கூடத்தின் வெளிப் பகுதியிலும் குப்பைகள் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதாரம் கேள்விக் குறி யாகி உள்ளது. பல்வேறு நோய்க ளை தீர்க்கும் மருத்துவமனையே, சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவித்து வருவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமா னது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர கால மகப்பேறு பிரிவு பகுதியில் உள்ள காத்திருப்போர் கூடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிக ளைக் குப்பைகள் ஏதுமின்றி சுத்தப் படுத்தி சுகாதாரத்தை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
                                    