... பகடை ...
அரக்க பரக்க பாடுபட்டும் பட்டனிதான் மிஞ்சுது
அரவயிறு கஞ்சி குடிக்க ஏழைகள் உசுரு போகுது
உழைத்து வாழும் மக்கள் வாழ்க்கை ஓடாக தேயுது-
இடது விரல் மையி மட்டும் கோட்டையிலே வாழுது
(அரக்க...)
முன்னூறு விற்ற கேசு பல மடங்கு உயருது
ஆயிரத்து இரனூரு பணம் தேடலாச்சுது
பாவிகளின் ஆட்சியில அடி வயிறு எறியுது
விறகு வாங்க காசுமில்ல அடுப்பில் பூனை தூங்குது
(அரக்க...)
நேற்று வரை எரிந்த கேசு விடியற்காலை தீர்ந்தது
விடியாமூஞ்சி ஆட்சியில சிலிண்டர் விலையும் உயர்ந்தது
உழைச்சி உழைச்சி எங்கள் மேனி ஈரும் பேனும் ஆச்சுது.
மோடி மஸ்தான் தாடியால தாயகமே ஊசலாடுது
(அரக்க...)
கார்ப்பரேட்டான் வாழ்க்கையிலே இன்பம் விளையாடுது
உழைக்கும் மக்கள் வீட்டுக்குள்ளே வறுமை சூறையாடுது
சூசகமாய் சூது ஆடி பகடையாடுகிற –
பாவி பட்டினியால் மக்களையும் சாகடிக்குற
– எம்.ரமேஷ்
தியாகி என்.வி.கலைக்குழு, தஞ்சாவூர்