tamilnadu

img

துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க விழா

தூத்துக்குடி, மே 28 - துறைமுக ஜனநாயக ஊழியர்  சங்க 46ஆவது ஆண்டு விழா மற்றும் மே தின விழா பொதுக்கூட்டம் துறை முக ஊழியர் குடியிருப்பு அருகே நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.   துறைமுகங்களை  தனியார்மயம் ஆக்குவதை கைவிட வேண்டும்,  துறை முக ஊழியர்கள் ஊதிய உயர்வு  ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய போனசை வழங்கிட வேண்டும், துறைமுக கேண்டீன் ஊழி யர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளி ட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கத்தின் 46ஆவது ஆண்டு விழா,  மே  தின விழாவை முன்னிட்டும் துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சார்பில் துறைமுக ஊழியர் குடியிருப்பு பகுதி யில் துறைமுக ஆணையக் குழு உறுப்பினரும் துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கத்தின் தலைவருமான  பாலகிருஷ்ணன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க நிர்வாகி ராஜ்குமார் வரவேற்று பேசினார். கன்னியாகுமரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், அகில இந்திய நீர்வழிப் போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் நரேந்திர ராவ்,   அகில இந்திய நீர்வழிப் போக்கு வரத்து சம்மேளனத்தின் செயலாளர் ரசல்,  துறைமுக ஜனநாயக ஓய்வூதி யர் சங்க செயலாளர் டாக்டர் சிவனா கரன்,

 துறைமுக ஜனநாயக ஊழியர்  சங்க  பொதுச் செயலாளர் சுசீந்திர குமார், சிஐடியு மாவட்டப் பொருளா ளர் அப்பாதுரை,  மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பூமயில், துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க செயலாளர் காசி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவாக துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் மீனாட்சி சுந்தரேசன் நன்றி கூறினார். பொதுக் கூட்டத்தில் கன்னியா குமரி நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார் மின் பேசுகையில், துறைமுக விழாக்களில் ஒன்றிய அமைச்சர்கள், உதவி அமைச்சர்களை அழைப்பதில் எவ்வித வேறுபாடும் இல்லை, ஒன்றிய அரசாங்கத்தின் நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு மேடை யில் இடம் அளிப்பது  தொடர்பாக கண்டிப்பாக ஒன்றிய அரசாங்கம் பதில் கூறி ஆக வேண்டும்,  நாடாளுமன்ற கட்டிடம் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கோவிலாக இருக்கக் கூடிய ஒரு இடம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை  - சாசனத்தை - சுதந்திர போராட்ட தியாகி கள் தியாகத்தை ஒன்றிய அரசாங்கம் எவ்வாறு காலில் போட்டு மிதிக்கிறது என்பதற்கு உதாரணமாக காந்தி கொலையில் தொடர்புடைய சாவர்க்கர் நினைவு தினத்தன்று கட்டிடத்தை திறக்கிறார்கள்   அகிம்சை தேசமென்றும் காந்தி தேசமென்று அழைக்கப்படக்கூடிய இந்தியாவில் நேர் எதிர்மாறான கொள்கையும், சிந்தனையும் கொண்ட  சாவர்க்கரின் நினைவு தினத்தில் நாடா ளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவது  இந்திய நாட்டை சேர்ந்த மக்களின் முகத்தில் கரிய பூசக்கூடிய ஒரு நிகழ்வாகும் என்றார்.

;