tamilnadu

பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

 கடலாடி, மே 16- கடலாடி பகுதியில் வசிக்கும் பஞ்சாலைகளில் பணிபுரியும் 30 கிராமங்களைச் சேர்ந்த 540 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இளம்பெண்கள் மற்றும் பெண்கள் பலர் திருப்பூர், கோயம் புத்தூர், ஈரோடு, அருப்புக்கோட்டை, விருதுநகர் உட்பட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் பஞ்சாலை களில் பணிபுரிந்து வந்தார்கள். கொரோனோ வைரஸ் தாக்கத் தின் விளைவாகவும், ஊரடங்கு உத்தரவினாலும் எவ்வித தொழில் வாய்ப்பும் இன்றி இவர்கள் வீடுகளில் முடங்கிக் கிடப்பதால் இவர்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் பஞ்சாலைகளில் பணிபுரிந்து தற்போது வறுமையில் வாடும் 540 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், சோப், கிருமி நாசினி மற்றும் முகக் கவசம் ஆகி யவை பிரீடம் பண்ட் நிறுவனம், பேடு நிறுவனம் சார்பில் புஷ்ப ராயன், மன்னர் மன்னன், வித்யா, பவுன்ராஜ், ஜோதி, நதியா, முத்துமாரி, அன்னத்தாய், களஞ்சியம் ஆகியோர் வழங்கினர்
சின்னாளபட்டி
திண்டுக்கல் காந்திகிராமம் ஊராட்சிக்குட்பட்ட இ.பி. காலனி பொதுமக்கள் துப்புரவுப் பணியாளர்களுக்கு நிவார ணப் பொருட்கள் வழங்கினர். ஆத்தூர் ஒன்றிய ஆணையாளர் ஜெயச்சந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் மருதமுத்து ஊராட்சித் தலைவர் தங்க முனியம்மாள் செயலாளர் தெய்வம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாஸ்கரன், இ.பி. காலனி மக்கள் கலந்துகொண்டனர்.
திருவில்லிபுத்தூர்
ஓய்வுபெற்ற சாலை ஆய்வாளர் சங்கத்தின் சார்பில் பார்வையற்றோர் விதவைகள் முதியோர் மாற்றுத்திறனாளி கள் உட்பட 35 நபர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் சி.காசி தலைமையில் நடைபெற்றது. திதுவில்லிபுத்தூர் ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் நிவாரணப் பொருட்களை வழங்கி னார். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். சீனிவாசன் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் இணைச் செயலாளர் பி.பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலை ஊரக வளர்ச்சி துறை சாலை ஆய்வா ளர்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிவாரண பொருட்களுக்கான ஏற்பாடுகளை நெடுஞ்சாலை ஊரக வளர்ச்சி துறை ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் என்.குமரகுரு செய்திருந்தார்