tamilnadu

img

திரைப்பட விமர்சகர் யதார்த்தா ராஜன் காலமானார்

மதுரை:
சர்வதேச திரைப்பட விமர்சகரும் இடதுசாரி சிந்தனையாளருமான யதார்த்தா ராஜன் மதுரை தளாவய் அக்ரஹாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாயன்று காலமானார். அவருக்கு வயது 71.
40 ஆண்டுகளாக குழந்தைகள் திரைப்படம், உலக திரைப்பட விழாவில் மதுரையின் ஒரு அடையாளமாகத் திகழ்ந்தவர் ராஜன்.உலகத் திரைப்படம், திரைப்பட விழா, சிறப்புத்திரையிடல், ஃபெஸ்டிவல், ரெட்ரோஸ்பெக்ட், குழந்தைகள் திரைப்பட விழா என்று தனதுவாழ்வை அமைத்துக் கொண்டவர்.ஓவியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் என்று வயது வித்தியாசமின்றி எல்லாரிடமும் அன்பாகப் பழகியவர் யதார்த்தா ராஜன்ராஜனுக்கு வெங்கல லட்சுமி என்ற மனைவியும் கதிர் என்ற மகனும் உள்ளனர் இவர்கள்இருவரும் வழக்கறிஞர்களாக உள்ளனர்.ராஜன் உடலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ஸ்ரீரசா, செயலாளர்அ.ந.சாந்தாராம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி செவ்வாயன்று மாலை நடைபெற்றது.யதார்த்தா ராஜன் மறைவிற்கு  மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமுஎகச இரங்கல்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொறுப்பு தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மாற்று சினிமாவை ஒரு இயக்கமாக முன்னெடுத்தவர் யதார்த்தா ராஜன் என்று குறிப்பிட்டுள்ளனர். 

;