விஜய் அளித்த ரூ. 20 லட்சத்தை திருப்பி அனுப்பிய குடும்பத்தினர்!
கரூர், அக். 28 - கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப் டம்பர் 27 அன்று தவெக தலை வர் விஜய்-யின் பிரச்சாரக் கூட்டத் தில், குழந்தைகள், பெண்கள் என 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த னர். உயிரிழந்தவர்களின் குடும் பங்களுக்கு, ரூ. 20 லட்சம் நிவார ணம் அறிவித்த விஜய், இந்த தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தினார். இவ்வாறு பணம் செலுத்தப்பட்டவர்களில், கரூர் கோடாங்கிபட்டியை சேர்ந்த ரமேஷின் குடும்பத்தினரும் அடங்குவர். ரமேஷின் குடும்பத்திற்கும் வங்கிக் கணக்கில் ரூ. 20 லட்சத்தை விஜய் செலுத்தியிருந்தார். முன்னதாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தி னருடன் வீடியோ காலில் பேசும்பொழுது, ‘உங்கள் அனைவரையும் நேரில் சந்திப்பேன்’ என்று கூறியிருந்தார். மாறாக, பாதிக்கப்பட்டவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டவுடன், அக்டோபர் 27 அன்று அனை வரையும் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு வரவழைத்து ஆறு தல் கூறினார். விஜய்யின் இந்த செயல் தமி ழகத்தில் கடும் கண்டனங்களுக்கு உள்ளா னது. பறிபோன 41 உயிர்களையும், அவர் களை பறிகொடுத்த குடும்பத்தின ரையும் அவமதிப்பது என்று பலரும் சாடினர். குறிப்பாக, உயிரிழந்த 41 பேர்களில் ஒருவரான கோடங்கி பட்டியை சேர்ந்த ரமேஷின் மனைவி சங்கவி, விஜய்யின் செயலால் அதிருப்தி அடைந்தார். அவர் மாம ல்லபுரம் செல்ல மறுத்து விட்டதுடன், விஜய்யின் பணத்தை ஏற்க மறுத்துள்ளார். ரமேஷின் மனைவி மாமல்லபுரம் வருவதற்கு மறுத்து விட்ட நிலையில், ரமேஷின் அக்கா பூமதி, அவரது கணவர் அர்ஜுணன், உறவினர் பாலு ஆகியோரை மாமல்லபுரம் வரவழைத்து விஜய் ஆறுதல் கூறியுள்ளார். அவர்களும் ரமேஷின் மனைவி சங்கவிக்குத் தெரியாமல் சென்று வந்துள்ளனர். இதையடுத்து, வெளிப்படையாக பேசவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான ரமேஷின் மனைவி சங்கவி, வாக்குறுதி அளித்தபடி விஜய் நேரில் வந்து ஆறுதல் தெரிவிக்காததால், தான் மாமல்லபுரம் செல்லவில்லை என்றும், அதேபோல விஜய், தனது வங்கிக் கணக்கில் செலுத்திய ரூ. 20 லட்சம் பணத்தையும் விஜய்-க்கே திருப்பி அனுப்பி விட்டதாகவும் பேட்டியளித்துள்ளார்.
