தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறி வியல் உணர்வை வெகுமக்களிடம் ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக இளம் தலைமுறையினரிடம் இயல்பாகவே வரும் புதிய சிந்தனைகளுக்கு உயிரூட்டி வளர்க்கிறது. அதன் வெளிப்பாடாக இளம் விஞ்ஞானிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களது முயற்சிகளுக்கு ஊக்கமளித்து மாநில-தேசிய அளவில் அறிமுகம் செய்யப்படுகிறார்கள். மாணவர்களை மட்டுமல்ல பெற்றோர்களையும் அறிவிய லாக சிந்திக்கத் தூண்டுகிறது இந்த இயக் கம். அதற்கு உதவும் வகையில் ‘மக்களுக் கான அறிவியல் - நூறு கிராமங்களில் சிறப்பு உரையாடல்…(வில்லேஜ் சயன்ஸ் கான்க்ளேவ்) நிகழ்ச்சியை நடத்தி வரு கிறது கன்னியாகுமரி மாவட்ட அறிவியல் இயக்கம். நோபல் பரிசு பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் சர்.சி.வி.ராமன். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலை நீள மாற்றத்தை கண்டுபிடித்தவர். அதற்கு இராமன் விளைவு என்கிற பெயர் சூட்டப் பெற்றது. அவரது பிறந்த நாளான நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய இந்த கிராம அறி வியல் மாநாடுகள் 2024 பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினத்தில் நிறைவடைய உள்ளது. கலை நிகழ்ச்சிகள், அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள், அறிவியல் மற்றும் சமூக விழிப்புணர்வுப் பாடல்கள், கதைகள், கலந்துரையாடல்கள் என விரிகிறது அறிவியல் மாநாடு. டிசம்பர் 6 ஆம் தேதி நாகர்கோவில் மாநகரில் உள்ள வட்டவிளை அரசு நடு நிலைப்பள்ளியில் அறிவியல் மாநாடு நடந் தது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற் றோர், அறிவியல் இயக்க செயல்பாட்டா ளர்கள் பங்கேற்றார்கள். அறிவியல் மக்க ளுக்கே, அறிவியல் வறுமை ஒழிக்கவே, அமைதிக்கே, விவசாயிக்கே, அறிவியல் உயிர் காத்திடவே… என்பது போன்ற வாச கங்கள் அடங்கிய பல வண்ண அட்டை களைக் கொண்டு, அது தொடர்பான கேள்வி எழுப்பி… சரியாக பதிலளிப்பவரிடமே அட்டையை ஏந்தச்செய்து… அனைவரை யும் பங்கேற்பாளராக மாற்றும் உத்தி சிறப்பானது.
தமிழக கல்வித்துறையின் சிறப்பான செயல்பாடுகளை வில்லிசை மூலம் பதிய வைத்தார்கள் மாணவிகள். நாடகம் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி னார்கள். தந்தைக்கு தூக்கு தண்டனை, தாயோ பார்வை மாற்றுத்திறனாளி. சக மாணவர்களால் புறக்கணிக்கப்பட்ட இவர் களது மகன் நன்றாக படித்து மருத்துவ ராகி தன்னை புறக்கணித்தவருக்கும் உதவு வதாக நாடக காட்சிகள் அமைக்கப்பட்டி ருந்தன. சிறப்பான நடிப்பாற்றலை மாணவி கள் வெளிப்படுத்தினர். அதிலும் பார்வை மாற்றுத்திறனாளி தாயாக மாணவி டி. முபிஷாவின் நடிப்பு அருமை. இந்த பகுதி யில் தொடர் அறிவியல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க ஒரு குழுவும் அமைக்கப் பட்டது. நிகழ்ச்சியை நிறைவு செய்தபிறகு, அறிவியல் இயக்க நிர்வாகி சசிகுமாரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ். ஜெஸி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி னார்.
அருகில் உள்ள வலம்புரிவிளை குப்பை மலையை மையப்படுத்தி மாவட்ட அறிவியல் மாநாட்டில் ஒரு அறிவியல் செயல்பாட்டை இப்பள்ளி மாணவர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். அது தேர்வு செய்யப்படாதது குறித்து மாணவர்களும் அறிவியல் ஆசிரியரும் தெரிவித்த ஆதங்கமே அவரது வெளிப்பாடு. கண்டு பிடிப்புகள் எதுவும் முதல் முயற்சியில் வெற்றி பெற்றதாக கூற முடியாது, அடுத்த வாய்ப்புக்கு தயாராவோம் என்று நம்பிக் கையூட்டி விடைபெற்றார் சசிகுமார். இதுபோன்ற அறிவியல் மாநாடுகள் நக ரம், கிராமம் என மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமல்லாது பொது இடங்க ளில் சுய உதவிக்குழுக்களும் மாநாட்டுக் கான ஏற்பாடுகளை முன்னின்று செய்கி றார்கள். இம்மாநாடுகள் ஒவ்வொன்றிலும் மாறுபட்ட அனுபவங்களை பெற்று வருவ தாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சிவ ஸ்ரீ ரமேஷ் தெரி வித்தார். இம்மாநாடுகளில் அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று வழி நடத்துகிறார்கள். கன்னியாகுமரி மாவட் டத்தின் முன்னணி தொண்டு நிறுவனமான மலர் (மகளிர் கல்வி விழிப்புணர்வு மற்றும் உரிமை சங்கம்) மற்றும் மகளிர் குழுவினர் துணை நிற்பதாகவும் அவர் தெரிவித்தார். அறிவியல் மாநாடு நடத்துவதற்கான ஒரு கையேட்டை மாவட்ட அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ளது. அதில் பல் வேறு பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இறுதியாக குறிப்பிட்டுள்ள மனித நேயம் மிக்க வரிகள்:
சாதி மதம் பார்க்க வேண்டாம்,
சண்டையிட்டு சாக வேண்டாம்,
நந்தவன பூக்களாக அண்ணாச்சி – எல்லாம்,
சேர்ந்து மணம் வீசிடுவோம் அண்ணாச்சி.