ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், என்.குணசேகரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, துணைத்தலைவர் கோபண்ணா, சட்டமன்ற கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.