tamilnadu

நெல்லையில் ஜூலை 2 முதல் மின்வாரிய குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி, ஜூன் 30- நெல்லை  மின் பகிர்மான வட்டத்துக்குள்பட்ட பல்வேறு கோட்டங்களில்  ஜூலை 2 முதல் 23 வரை மின்வாரிய குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.  இது தொடர்பாக நெல்லை  மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது- நெல்லை  மாவட்டத்தில் ஜூலை 2 முதல் 23 வரை பல்வேறு கோட்ட அலுவலகங்களில் மின்வாரிய குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்படி ஜூலை 2-ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும்,  ஜூலை 5-ஆம் தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும்,  ஜூலை 9-ஆம் தேதி கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும்,  ஜூலை 12-ஆம் தேதி நெல்லை  கோட்ட கிராமப்புற அலுவலகத்திலும்,  ஜூலை 16-ஆம் தேதி  தென்காசி கோட்ட அலுவலகத்திலும்,  ஜூலை 19-ல் நெல்லை  கோட்ட நகர்ப்புற அலுவலகத்திலும்,  ஜூலை 23-ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும் மின் வாரிய குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில்  கூறப்பட்டுள்ளது.