tamilnadu

img

தியாகி லீலாவதிக்கு அவமரியாதை வருத்தம் தெரிவித்த ஏபிவிபி

மதுரை, பிப்.12- பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி வில்லாபுரம் வீரத் தியாகி லீலாவதியை அவமதித்துள்ளது. ஏபிவிபியின் மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. இதற்காக அந்த அமைப்பு விளம்பரப் பணியில் ஈடுபட்டுள்ளது. மாநாட்டை விளம்பரப்படுத்துவது தவறல்ல. ஆனால், மதுரை வில்லாபுரம் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனைக்காக போராடியதற்காக கொலை செய்யப்பட்ட தியாகி லீலாவதியின் உருவப்படத்தின் மீது ஏபிவிபி மாநாட்டு விளம்பர சுவரொட்டியை ஒட்டி அவமரியாதை செய்துள்ளது. இந்தச் செயல் மதுரை தெற்குவாசல் பாம்பன் சாலையில் நடந்துள்ளது. இதற்கிடையில் லீலாவதியை அவமரியாதை செய்ததற்கு ஏபிவிபி வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.