புதுக்கோட்டை, ஜன.20 - புதுக்கோட்டை மாவட்டம் திரு மயம் அருகே தொடர்ந்து கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடியவரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் வெங்களூரைச் சேர்ந்த வர் ஜகபர் அலி (58). இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது. முறையான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கை உரிய முறையில் நடத்தி குற்ற வாளிகள் அனைவருக்கும் தண்டனை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடராத வகையில் கனிமவளக் கொள்ளை யர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும், அதிகாரிகள் முறையான நடவடிக்கையை எடுப்பதற்கும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.