tamilnadu

img

‘‘ஆண்ட சாதி, அடிமை சாதி’’ என்ற இந்துத்துவா கருத்தியலை முறியடிப்போம்!

மேலூர், ஜூன் 30- மேலவளவு தியாகிகளின் 25-ஆவது ஆண்டு நினைவு தினம் வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள மேலவளவு தியாகிகள் நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மூத்த தலைவர் சி.ராமகிருஷ்ணன், மாநி லக்குழு உறுப்பினர்கள் இரா.விஜய ராஜன், எஸ்.பாலா, மதுரை மாநகராட்சி  துணை மேயர் டி.நாகராஜன், சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் டி.குமரவேல், வை.ஜென்னியம்மாள், மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன்,   மேலவளவு கிளைச் செய லாளர் கார்த்தி உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்  கே.சாமுவேல்ராஜ் பேசிய தாவது: மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஏழு பேர் கொல்லப்பட்ட சம்பவம் கேட்டு  அதிர்ச்சியடைந்து  களத்திற்கு முதலில்  வந்தவர் விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், வாழும் வரலாறு மான என்.சங்கரய்யா தான். இந்த  சம்பவம் கேட்டு அதிர்ச்சி யடைந்த அவர், தீண்டாமைக் கொடு மைக்கு முற்றுப் புள்ளிவைக்க வேண்டு மானால், கிராமப்புற சமூக-பொருளா தார நிலையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதற்குத் தீவிர நிலச்சீர் திருத்தத்தை அமலாக்க வேண்டும் என்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர்  வலி யுறுத்தல் காரணமாக மதுரையில் தமிழக அரசே நடத்திய தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில்  தீண்டாமை ஒழிப்பு  உறுதிமொழியை முதல்வர் வாசிக்க மாநாட்டில் அனைவரும் திரும்பக் கூறி  எடுத்துக் கொண்டதாக என்.சங்கரய்யா  குறிப்பிட்டுள்ளதோடு, இந்த உறுதி  மொழியை பள்ளி கல்லூரி மாணவர்கள் எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்; இதற்கான அரசாணை வெளியிட முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சங்கரய்யா பேசினார். இதைத் தொடர்ந்து பள்ளி பாடங்களில் தீண்டாமைக் கொடுமை ஒழிப்பு தொடர்பான வாசகங்கள் இடம்  பெற்றன. இருப்பினும் தீண்டாமைக் கொடுமை நீடிக்கிறது.

நக்கலமுத்தன்பட்டி ஊராட்சித் தலைவர் ப. ஜக்கன் மற்றொரு சமூகத் தினரை நோக்கி கேள்வியெழுப்பினார் என்ற காரணத்திற்காக கடந்த 2006-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி கொல்லப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப் பாக்கம் ஊராட்சித் தலைவரான பட்டி யல் சமூகத்தைச் சேர்ந்த அமிர்தத்தை சுதந்திர தினத்தன்று தேசிய கொடி யேற்ற அனுமதிக்கவில்லை. இது சாதி வன்மத்தின் உச்சம். கொடியேற்ற விடாமல் தடுத்தது முன்ளாள் ஊராட்சித் தலைவர் ஹரிதாஸ். இந்தப்  பிரச்சனை மனித உரிமைகள் ஆணை யம் வரை சென்றது. பின்னர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலை வர் அமிர்தம்,  ஆட்சியர் மகேஸ்வரி, காவல்துறைக் கண்காணிப்பாளர் அரவிந்தன் முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக் கொடி யேற்றினார். அரக்கோணம் அருகிலுள்ள வேடல் ஊராட்சித் தலைவரான பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த கீதாவின் கணவர் மூர்த்தியை, கடந்த 2022 ஏப்ரல் 1அன்று  ஆறு பேர்கொண்ட கும்பல், சுத்தியா லும் பெரிய கற்களாலும் கடுமை யாகத் தாக்கியுள்ளனர்.  இதுவரை பொதுத் தொகுதியாக இருந்த வேடல் ஊராட்சி 2021-ஆம்  ஆண்டு பட்டியலின பெண்களுக் கென்று ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்த லில் நின்று கீதா வெற்றிபெற்றுள்ளார். துணைத் தலைவரான வெங்கடாஜல பதி காசோலையில் கையெழுத்திட மறுப்பது, கூட்டம் நடத்தவிடாமல் தடுப்பது, நாற்காலியில் உட்காரக் கூடாது என மிரட்டுவது எனப் பல்வேறு வன்கொடுமைகளை கீதாவிடம் கடைப் பிடித்துவந்துள்ளார். இந்தப் பின்னணி யல் கீதாவின் கணவர் கொலைவெறி தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். இப்படி தீண்டாமைக் கொடுமைகள் தொடர்கின்றன. 

மக்கள் பிரதிநிதிகளாக பட்டிய லினத்தவர் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் சுதந்திரமாக பணியாற்ற முடியவில்லை என்பதற்கு மேற்கண்ட சம்பவங்களே உதாரணம். கீழ் வெண்மணி தொடங்கி மேல வளவு வரை மட்டுமல்ல, தீண்டாமைக் கொடுமை நடைபெறும் இடங்களில் எல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிட்டு பட்டியலின மக்களின் உரிமைகளை நிலைநாட்ட போராடி வருகிறது. மலக்குழி மரணங்கள் மற்றொருபுறத்தில் கழிவுநீர் வாய்க்கால்களில் இறங்கி அதை சுத்தப் படுத்தும் பணியில் ஈடுபடும் தொழி லாளர்கள் விஷவாயு தாக்கி இறக்கின்ற னர். மதுரை பழங்காநத்தத்தில் கழிவு நீர் தொட்டி மின்மோட்டாரை சரி செய் வதற்காக சென்ற மூன்று பேர் உயிரிழந்த னர். சென்னை மாதவரத்தில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட நெல்சன் என்பவர் விஷவாயு  தாக்கி உயிரிழந்தார். ரவிக்குமார் என்ப வர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மலக்குழி மரணங்கள்

மற்றொருபுறத்தில் கழிவுநீர் வாய்க்கால்களில் இறங்கி அதை சுத்தப் படுத்தும் பணியில் ஈடுபடும் தொழி லாளர்கள் விஷவாயு தாக்கி இறக்கின்ற னர். மதுரை பழங்காநத்தத்தில் கழிவு நீர் தொட்டி மின்மோட்டாரை சரி செய் வதற்காக சென்ற மூன்று பேர் உயிரிழந்த னர். சென்னை மாதவரத்தில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட நெல்சன் என்பவர் விஷவாயு  தாக்கி உயிரிழந்தார். ரவிக்குமார் என்ப வர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சென்னையை அடுத்த பெருங்குடி காமராஜர் நகரில் தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடி யிருப்பில் 15 அடி நீளம், 15 அடி அகலம், 20 அடி ஆழமுள்ள கழிவுநீர்த் தொட்டி உள்ளது. இந்த கழிவுநீர் தொட்டியில் இறங்கி பள்ளிக்கரணையை சேர்ந்த பெரியசாமி, தட்சிணாமூர்த்தி  ஆகி யோர் சுத்தம் செய்து கொண்டு இருந்த னர். அப்போது விஷவாயு தாக்கியதில் இருவரும் மயக்கம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இவர்களது சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து கழிவுநீர் தொட்டியில் மயங்கி இருந்த இருவரையும் மீட்டனர். இதில் தொழிலாளி பெரியசாமி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக பலியானார். மேலும் விஷவாயு தாக்கி உயிருக்கு போராடிய தட்சிணாமூர்த்தியை மீட்டு, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலை யில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மலக்குழிகளில், கழிவுநீர் தொட்டிக ளில் இறங்கி பணிசெய்யும் போது பட்டியல் சமூகத்துத் தொழி லாளர்கள் உயிரிழக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் இனியும் தொட ரக்கூடாது.

நம்மில் யாரும் சாதிய பாகுபாடு பார்க்கக் கூடாது. விவசாயவர்க்கம். தொழிலாளி வர்க்கம் என்ற இரண்டு வர்க்கங்களே உள்ளன. நாம் நமக்கான உரிமைகளுக்காக போராடவேண்டும். இன்றைக்கு நாங்கள் எல்லாம் ஆண்ட சாதி; இவர்கள் அடிமை சாதி  என்கின்றனர். இந்துத்துவா மதவெறி  சக்திகள் நம்மைப் பிரித்து வைத்துள் ளார்கள். ‘‘ஆண்ட சாதி, அடிமைகள் சாதி’’ என்ற இந்துத்துவா கருத்தியலை  முறியடிப்போம், சாதிகளற்ற சமுதாயம் படைப்போம். அதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டங் களில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொல்.திருமாவளவன் மரியாதை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தமது  கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மேலவளவு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.  சிபிஐ தலைவர்கள் வீரபாண்டி யன், பா.காளிதாஸ், க.மெய்யன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
 

;