tamilnadu

img

எங்கே எங்கள் எய்ம்ஸ்? மதுரையில் சிபிஎம் மாபெரும் போராட்டம்

மதுரை, ஜன.24-  மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங் களைச் சேர்ந்த மக்களுக்கு  பயனளிக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளைத் தொடங்க ஒன்றிய பாஜக அரசை வலி யுறுத்தி “எங்கே எங்கள் எய்ம்ஸ்” என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் செவ்வாயன்று தொடர் முழக்கப்  போராட்டம் நடைபெற்றது.

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் தலைமையில் நடைபெற்ற இப்போரா ட்டத்தில் மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), நவாஸ்கனி (இராமநாதபுரம்), சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி (திமுக), மு.பூமிநாதன் (மதிமுக), மதுரை மாநகராட்சி துணை மேயர் டி.நாக ராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), திமுக தலைவர்கள் பொன். முத்துராமலிங்கம், பெ. குழந்தைவேலு, வேலுச்சாமி, காங்கிரஸ் நிர்வாகிகள் பாண்டியன், ஜெயராமன், விசிக சார்பில் கதிரவன், சிபிஐ சார்பில் எம்.எஸ்.முருகன், சிபிஎம்மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், கே.பாலபாரதி, எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர்கள் மா.கணேசன் (மதுரை மாநகர்).

கே.இராஜேந்திரன் (மதுரை புறநகர்), கே.அர்ஜுனன் (விருதுநகர்), கே.பி.  ஆறுமுகம் (தூத்துக்குடி), க.ஸ்ரீராம் (திருநெல் வேலி), உ.முத்துப்பாண்டியன் (தென்காசி). ஆர்.செல்லசுவாமி (கன்னியாகுமரி), ஆர்.சச்சிதானந்தம் (திண்டுக்கல்), ஏ.வி.அண்ணா மலை (தேனி), வி.காசிநாததுரை (இராமநாத புரம்), ஆர்.கே.தண்டியப்பன் (சிவகங்கை), மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, கே.ஜி.பாஸ்கரன், இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.