நாகர்கோவில், ஆக.21- தேசிய கல்விக்கொள்கை, சுற்றுசூழல் தாக்க சட்ட வரைவு அறிக்கை, பொதுத்துறை நிறு வனங்களை தனியாருக்கு விற்பது என தொடர்ந்து மக்கள் விரோத, தேச விரோத செயல்க ளில் ஈடுபட்டு வரும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் மக்கள் இயக்கத்தை யொட்டி வியாழன் முதல் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வீடுவீடாக நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வெள்ளியன்று நாகர்கோவில் மாநகர குழு சார்பில் நாகர்கோ வில் பரதர் தெருவில் நடை பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, மாநகர குழு உறுப்பினர்கள் அஸீஸ், மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.