tamilnadu

img

தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் ஊழல்.... சு.வெங்கடேசன் எம்.பி., குற்றச்சாட்டு.....

மதுரை:
தமிழகத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் என்பது, மக்களின் வரிப்பணத்தைச் சூறையாடும் வாசல்கதவாக உள்ளது என சு.வெங்க டேசன் எம்.பி., கூறியுள்ளார்.

மதுரையில் “ஸ்மார்ட் சிட்டி”பணிகள் தொடர்பான ஆலோசனைகுழுக்கூட்டம் செவ்வாயன்று மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டக்குழுத் தலைவரும் மாவட்ட ஆட்சியருமான அன்பழகன்,  இணைத் தலைவரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு. வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.சட்டமன்ற உறுப்பினர்கள்  பி.மூர்த்தி,  பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், வி.வி. ராஜன்செல்லப்பா, மாநகராட்சி ஆணையாளர் ச. விசாகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய சு.வெங்க டேசன் எம்.பி., “ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகளுக்கு மக்களின் பங்கேற்பு அவசியம். மக்களுக்குப் பாதிப்பில்லாமல் பணிகளை முடிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் எப்படி நடைபெறுகிறது? தமிழ்நாடு முழுவதும்நடைபெறும் பணிகளுக்கு பத்து சிஇஓ-க்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவரை இரண்டு சி.இ.ஓ-க்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு ள்ளனர். மதுரை உள்ளிட்ட பல்வேறுமாநகரங்களுக்கு சி.இ.ஓ-க்கள் நியமிக்கப்படவில்லை. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும்இந்தப் பணிகளில் நிர்வாகப் பலகீனம், கோளாறு உள்ளது. இது தமிழக அரசின் மிகப்பெரிய தோல்வியாகும். தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி மக்களின் வரிப்பணம் சூறையாடப் படும் வாசல் கதவாக உள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், மதுரையைப் பொறுத்தமட்டில் ஸ்மார்ட் சிட்டி கூட்டம் 14முறை நடைபெற்றிருக்கவேண்டும். தற்போது வரை கூட்டப்படவில்லை. கடந்த மாதம் மாவட்ட வளர்ச்சி மற்றும்  ஒருங்கிணைப்பு அதிகாரிகள் முடிவுகளின் படி ஆலோசனைக் கூட்டம் நடைபெற வேண்டுமெனக் கூறப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டமும் கூட்டப்படவில்லை. பல கடிதங்கள் எழுதிய பிறகு தற்போது கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.எந்த வரைமுறையும் இல்லாமல் திட்டங்களை ஆரம்பித்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்காததால் மக்கள் படும் இன்னல்களுக்கு அளவே இல்லை. சரியான தலைமைப் பொறுப்பு இல்லாததால் ஒரு பணி மட்டுமே முடிந்திருக்கிறது.மதுரை பெரியார் பேருந்துநிலையத்தில் வணிக வளாகம் கட்ட மூன்றுமுதல் நான்கு சதவீத இடம் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு எதிர்மறையாக உள்ளது. இதில் ஒரு பங்கு குறைக்கப்பட வேண்டும்.

எல்இடி பல்புகள் பொருத்து வதற்கு மட்டும் ரூ.24 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதுபற்றிய முறையான விசாரணை தேவை. திட்டப்பணிக்கென ஒதுக்கப்பட்ட நிதியை சேமித்தால் அது அரசுப்பள்ளி, மாநகராட்சிப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.

;