tamilnadu

கொரானோ வைரஸ் தாக்கம் முன்பதிவு ரயில் கட்டணத்தை திரும்பப் பெற ரயில்வே ஏற்பாடு

மதுரை, மார்ச் 21- கொரானோ வைரஸ் தாக்கம் எதிரொலியாக ரயி லில் பயணம் செய்ய முன்ப திவு செய்யப்பட்ட பயணச்  சீட்டுகளின் பயணக் கட்ட ணத்தை திரும்ப பெறுவ தற்கான விதிமுறைகளை இந்திய ரயில்வே நிர்வாகம் மாற்றியுள்ளது. இணையதளத்தில்/ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டு களுக்கான விதிமுறைகளில் மாற்றம் இல்லை. இந்த  பயணிகள் பயணக்கட்ட ணத்தை திரும்பப் பெற ரயில் நிலையத்திற்கு வர வேண்டியதில்லை. ரயில்வே முன்பதிவு அலு வலகத்தில் பதிவு செய்யப்பட்ட பய ணச்சீட்டுக் கட்டணத்தை திரு ம்பப் பெறுவதற்கான விதிமு றைகளில் மாற்றம் செய்ய ப்பட்டுள்ளது. இந்த மாற்றம் மார்ச் 21-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். ரயில்வே நிர்வாகம் ரயி லை ரத்து செய்தால், பய ணச்சீட்டை பயணத் தேதியி லிருந்து 45 நாட்களுக்குள் ரயி ல்வே முன்பதிவு அலுவ லகத்தில் சமர்ப்பித்து பய ணக் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.  ரயில்வே நிர்வாகம் ரயி லை ரத்து செய்யாத நிலை யில் பயணிகள் பயணம் செய்ய விரும்பவில்லை யென்றால் பயணத் தேதி யிலிருந்து முப்பது நாட்க ளுக்குள் ரயில் நிலை யத்தில் பயணச்சீட்டு ஒப்புவிப்பு ரசீது பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்பு  இந்த ரசீதை பதிவு செய்த  60 நாட்களுக்குள் சம்பந்த ப்பட்ட கோட்ட வர்த்தக  மேலாளருக்கு அனுப்பி வைத்து பயணக் கட்ட ணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். பயணத்தை தொலை பேசி எண் 139 வாயிலாக ரத்து செய்தவர்கள், பய ணக் கட்டணத்தை பயணத் தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் ரயில் நிலைய முன் பதிவு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

;