tamilnadu

img

அதிகாரிகளுக்கு கொரோனா மதுரை சிபிஐ அலுவலகம் மூடல்

மதுரை:
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை மதுரை ஆத்திகுளத்தில் சிபிஐ அலுவல கத்தில் வைத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்குழுவில் இடம்பெற்றுள்ள நான்கு சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள்மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இதையடுத்து மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.