tamilnadu

திருநெல்வேலியில் மேலும் 23 பேருக்கு கொரோனா

பாதிப்பு 136 ஆக உயர்வு

திருநெல்வேலி, மே 15- நெல்லை மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு பாதித்தவர்கள் எண் ணிக்கை மொத்தம் 136 ஆக உயர்ந் துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண் ணம் உள்ளது. இதில் ஆரம்பத்தில் திரு நெல்வேலியில் கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதால், பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைய தொடங்கியது. ஆனால் சென்னை உட்பட வெளி மாவட்டங்களிலிருந்து திரும்பி யவர்களால் தற்போது கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. புதன்கிழமை 98 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில், வியாழனன்று 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. வெள்ளி யன்று மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா தொற் றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.