tamilnadu

அண்ணா பல்கலை.,யில் 9 மாணவர்களுக்கு கொரோனா உறுதி

சென்னை, டிச.9- சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கிப்படிக்கும் 9 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,  முதலில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர்களது தொடர்பில் இருந்த 300 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தொற்று கண்டறியப்பட்டதாக குறிப்பிட்டார். கொரோனா உறுதியான அனைவரும் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நலமுடன் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மேலும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 763 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.