tamilnadu

img

தோழர் பொ.மோகன் சகோதரர் காலமானார்

மதுரை:
மதுரை தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் மறைந்த தோழார் பொ.மோகனின் சகோதரரும். மதுரை காஸ்ட்டேரா படிப்பகஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான தோழர் பொ.ராஜா (74) புதனன்று காலமானார். உடல்நலக்குறைவின் காரணமாக அரசு ராஜாஜிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜாவுக்குலீலாவதி என்ற மனைவியும், குனசுந்தரி என்ற மகளும், தயா என்ற மகனும் உள்ளனர். பஞ்சாலைத் தொழிலாளியான பொ.ராஜா மேலப்பொன்னகரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றியவர் ஆவர்.அன்னாரது மறைவுசெய்தியறிந்து மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், பகுதிக்குழு செயலாளர் வை. ஸ்டாலின் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி நிகழ்ச்சி புதனன்றுமாலை நடைபெற்றது.பொ.ராஜா மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ் ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

;