tamilnadu

img

தோழர் கோடியேரி காலமானார்: கண்ணீரில் கண்ணூர்

கண்ணூர், அக்.2- போர்க்குணத்தாலும், எளிய வாழ்க்கையாலும் கேரள மக்களின் மனங்களை வென்ற அன்புத் தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன், இப் போது கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் என்றும் அழியாதவராக, காலமாகி நிற்கிறார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக் குழு உறுப்பி னர் கொடியேரி பாலகிருஷ்ணன் (69) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் காலமானார். ஞாயிறன்று பகல் 1 மணிக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து கண்ணூ ருக்கு கொடியேரியின் உடல் கொண்டு வரப்பட்டது. கண்ணூர் விமான நிலை யத்தில் முதல்வர் பினராயி விஜயன், மத்தியக்குழு உறுப்பினர் இ.பி.ஜெய ராஜன், மாவட்டச் செயலாளர் எம்.வி. ஜெயராஜன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.  பின்னர் செந்தொண்டர்களின் அணி வகுப்பு மரியாதையுடனும் பல்லா யிரக்கணக்கான ஊழியர்களின் முழக்கங் களுடனும் கண்ணூர் நோக்கிய இறுதிப் பயணம் சென்றது. ஏராளமான வாக னங்கள் அணிவகுத்து வர மட்டன்னூர், கூத்துப்பறம்பு, கதிரூர் உள்ளிட்ட 14 மையங்களில் சிறிது நேரம் நின்று மக்களின் இறுதி மரியாதை ஏற்றபின் வாகனம் கடந்து சென்றது.

மாலை 3.30 மணியளவில் தலச்சேரி டவுன்ஹாலில் பொதுமக்கள் பார்வைக் காக கொடியேரியின் உடல் வைக்கப் பட்டது. இரவு 12 மணிவரை அங்கு பொது  மக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு மடபீடிகையில் உள்ள இல்லத்திற்கு அவரது உடல் திங்கள் (இன்று) அதிகாலை கொண்டு செல்லப்படு கிறது. திங்களன்று காலை 10 மணி  வரை அங்கு பொதுமக்கள் பார்வைக்கு  வைக்கப்பட்டு, பின்னர் காலை 11  மணி முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்டக் குழு அலுவலக மான அழிக்கோடன் மன்றத்தில் வைக்கப்படவுள்ளது. பின்னர் பிற்பகல் 3 மணிக்கு பையம்பலத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த கோடியேரி பாலகிருஷ்ணன் ஆகஸ்ட் மாத இறுதியில் தனது பொறுப்பில் இருந்து விலகி, சிகிச்சைக் காக சென்னை அழைத்துவரப்பட்டார்.  கோடியேரி நவம்பர் 16, 1953 இல் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் தோழர் குஞ்சுண்ணி குரூப் - நாராயணி யம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். மாணவராக இருந்தபோதே தீவிர அரசியலில் ஈடுபட்டார். அவர்  இந்திய மாணவர் சங்க மாநிலச் செய லாளர், அகில இந்திய இணைச் செய லாளர், வாலிபர் சங்க கண்ணூர் மாவட்டத் தலைவர் மற்றும் சிபிஎம்  கண்ணூர் மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். அவசர நிலை காலத்தில் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டார். மிசா கைதியாக 16 மாதங்கள் சிறையில் இருந்தார்.

1982, 1987, 2001இல் தலச்சேரியில் இருந்து சட்டப் பேரவைக்கு தேர்வு  செய்யப்பட்டார். 2001-06 மற்றும் 2011-16 இல் எதிர்க்கட்சி துணைத் தலைவ ராகவும், 2006-11இல் உள்துறை மற்றும் சுற்றுலா அமைச்சராகவும், 1988இல் கட்சியின் மாநிலக் குழு உறுப்பின ராகவும், 1995ல் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் ஆனார்.  2002 இல் மத்திய குழுவிற்கும், 2008 இல் அரசியல் தலைமைக்குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015இல் ஆலப்புழா மாநாட்டில் மாநிலச் செய லாளராக தேர்வு செய்யப்பட்டார். 2016இல், கேரள இடது ஜனநாயக முன்னணி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி தேர்தலில் முன்னிலை பெற்றது. 2018இல் திருச்சூர் மாநாட்டில் செயலாளராகத் தொடர்ந்தார். நவம்பர் 2020 முதல் ஒரு  வருடத்திற்கு சிகிச்சைக்காக பொறுப்பில் இருந்து விடுவிக்கக் கேட்டுக் கொண்டார். உடல் நலக் குறைவு இருந்த போதிலும், 2021 சட்ட மன்றத் தேர்தலின் போது முன்னணி யின் வெற்றிக்காக அயராது உழைத் தார். மார்ச் 2022 இல், எர்ணாகுளம் மாநாட்டில் மூன்றாவது முறையாக செயலாளராக ஆனார். தேசாபிமானி நாளிதழின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். சிபிஎம் தலைவரும் தலச்சேரி  எம்எல்ஏவுமான எம்.வி.ராஜகோபா லின் மகள் எஸ்.ஆர்.வினோதினி கோடி யேரி பாலகிருஷ்ணனின் மனைவி. பினாய் கோடியேரி, பினீஸ் கோடியேரி ஆகியோர் மகன்கள். டாக்டர். அகிலா, ரினிதா ஆகியோர் மருமகள்கள் ஆவர்.

;